இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று ஹுண்டாய். இந்திய சந்தையில் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹுண்டாய் நிறுவனத்தின் மின்சார கார் வரிசை Hyundai Ioniq ஆகும்.

Continues below advertisement

Hyundai Ioniq 3:

இந்த நிலையில், ஹுண்டாய் நிறுவனம் விரைவில் ஹேட்ச்பேக் வரிசையில் அறிமுகப்படுத்த உள்ள புதிய கார் Hyundai Ioniq 3. இந்த  காரில் 42.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளது. இது ஏரோ ஹேட்ச் தோற்றத்தில் இந்த கார் உருவாக்கப்படுகிறது. மேலும், இதன் டாப் வேரியண்டில் 61 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளது.

மைலேஜ்:

42.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட Hyundai Ioniq 3 கார் 344 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதேபோல, டாப் வேரியண்டான 61 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட Hyundai Ioniq 3 கார் 496 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் 250 என்எம் வரை டார்க் இழுதிறன் கொண்டது. 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது இந்த கார்.

Continues below advertisement

அதிகபட்ச வேகம்:

அதிகபட்சமாக 170 கிலோமீட்டர் வேகத்தில் இந்த வேகத்தில் செல்லலாம். இந்த காருக்கு 80 சதவீத பேட்டரி சார்ஜரை 29 நிமிடங்களில் ஏற்றலாம். இந்த கார் 4 ஆயிரத்து 155 மி.மீட்டர் நீளமும், 1800 மி.மீட்டர் அகலமும், 1505 மி.மீட்டர் உயரமும் கொண்டது. இதில் மொத்தமாக 441 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. இந்த கார் இந்தாண்டு பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு வசதிகள்:

இதன் கேபினில் டேஷ்போர்ட் பல்வேறு வசதிகளுடன் உருவாகியுள்ளது. ஆட்டோ ஹோல்ட், ஹில் ஹோல்ட் வசதி, ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்டது. இதன் டேஷ்போர்ட் 12.9 இன்ச் மற்றும் 14.6 இன்ச் வசதி கொண்ட டிஸ்ப்ளே வசதி கொண்டது. இந்த கார் வெள்ளை, சாம்பல், நீலம் உள்ளிட்ட பல வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் சக்கரம் 16 இன்ச் முதல் 19 இன்ச் வரை உள்ளது.

இந்த காரின் விலை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. குறைந்தபட்சம் ரூபாய் 15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த IONIQ வரிசையில் 6 கார் மிகவும் பிரபலம் ஆகும். தற்போது வரை IONIQ வரிசையில் 5 மற்றும் 6 கார்கள் இந்திய சந்தையில் அதிகளவு விற்பனையாகி வருகிறது. ஹுண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா எலக்ட்ரிக் காரும் மிகவும் பிரபலம் ஆகும். பல்வேறு வசதிகளுடன் ஹேட்ச்பேக் மாடலில் உருவாகியுள்ள இந்த கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவே்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI