சென்னை, நந்தனத்தில் தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றினார். யார் இன்னிக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக் கொடுத்தது என்று எல்லோரும் கேட்கும் வகையில், அவரின் உரையில் பாஜக, அதிமுகவை சரமாரியாக விளாசினார்.
அதில் அவர் பேசிய உரையின் டாப் ஹைலைட்ஸ்:
- புதுச்சேரியில் சுமார் 90 சதவீத வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுவே நடக்க வேண்டும்.
- விஜய் வெளியே வருவதே இல்லை என்கிறார்கள். சேலத்துக்கு அருகே எடப்பாடியில் இருந்து நீங்கள் வெளியே வாருங்கள். 10 தோல்வி கண்டவர் என்னை விமர்சிக்கிறார். எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு டிவி சின்னத்தில் டிவிகே தொண்டர்கள் வாக்களிக்க வேண்டும்.
- என்னை எல்லோரும் நடிகன் என்கிறார்கள். நான் நடிகன்தான். ஆனால் உங்களைப் போல் நான் அரசியலில் நடிக்கவில்லை.
- திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ வாக்களிப்பது என்பது பாஜகவுக்கு ஓட்டு போடுவதுதான். எல்லோரும் ஏன் என்னை ஒருவனை மட்டுமே எதிர்க்கிறார்கள்? ஏனெனெில் எல்லோரும் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள்.
- ஒவ்வொரு வீட்டில் இருக்கும் என்னுடைய குட்டி ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். உங்களின் வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்கள், சொந்தங்களிடம் விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று மறக்காமல் சொல்லுங்கள்.
- என்னென்னமோ தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதை எதையும் நம்பாதீர்கள். மக்கள் விரைவில் பதில் தருவார்கள்.
- ஸ்டாலின் அரசுக்கு நான் என்ன தவறு செய்தேன்? உங்களின் உணவில் மண்ணை அள்ளிப் போட்டேனா? மக்களிடம் நீங்கள் செய்யும் தவறுகளையும் ஊழலையும் வெளிப்படுத்தினேன். அவ்வளவுதான்.
- கரூர் சம்பவத்தில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. காவல்துறை கொடுத்த நேரத்தில் சரியாக வந்தேன். லைவில் எல்லோரும் அதைப் பார்த்தார்கள். உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஏன் எல்லா பழியையும் என்மீது போடுகிறீர்கள்?
- ஏன் உங்களின் அடிமையை (திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி) கரூரில் இருந்து கோயம்புத்தூருக்கு அனுப்பி வைத்தீர்கள்?
- தேர்தலுக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற பாஜகவின் காலில் திமுக விழும். பாஜகவின் அடிமையாக யார் இருப்பார்கள் என்பதில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி உள்ளது. திமுக, மோடி காலில் விழுமா அமித் ஷா காலில் விழுமா என்று பார்ப்போம்.
- நான் பொது மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குச் செல்வேன்.
- ஏப்ரல் 23ஆம் தேதி அன்று, அன்று ஒரே நாள் மட்டும் விஜய் சொல்வதைக் கேளுங்கள். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் விஜய் நீங்கள் சொல்வதைக் கேட்பான். வெற்றி நிச்சயம். கான்ஃபிடண்ட்டாக இருங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.
