இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஹுண்டாய் மற்றும் மாருதி சுசுகி நிறுவனம். இந்த இரண்டு நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் பல கார்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 

Continues below advertisement

அந்த வகையில், ஹுண்டாயின் Hyundai Exter மற்றும் Maruti Suzuki Fronx ஆகிய 2 கார்களையும் ஒப்பிட்டு இரண்டு கார்களில் எந்த கார் சிறந்த கார்? என்பதை கீழே விரிவாக காணலாம். 

விலை:

Maruti Suzuki Fronx காரின் தொடக்க விலை ரூபாய் 8.20 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 11.36 லட்சம் ஆகும். 

Continues below advertisement

Hyundai Exter காரின் தொடக்க விலை ரூபாய் 6.87 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 10.83 லட்சம் ஆகும். 

எஞ்சின்:

Hyundai Exter காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர் இன்லைன் உள்ளது. இது 1.2 காப்பா எஞ்ஜின் ஆகும். பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். 82 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் கொண்டது. BS6 ரகம் ஆகும்.

Maruti Suzuki Fronx காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. இதில் 4 சிலிண்டர் இன்லைன் உள்ளது. இது 1.2 லிட்டர் டூயல் ஜெட் எஞ்ஜின் ஆகும். டூயல் விவிடி எஞ்ஜின் ஆகும். பெட்ரோல் எஞ்ஜின் ஆகும். 89 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது ஆகும். BS6 ரகம் ஆகும். 

மைலேஜ்:

Hyundai Exter கார் 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடிய ஆற்றல் கொண்டது. 

Maruti Suzuki Fronx கார் 21.79 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 

கியர்:

Hyundai Exter 5 கியர்களை கொண்டது. 

Maruti Suzuki Fronx 5 கியர்களை கொண்டது. 

இருக்கை, பெட்ரோல் டேங்க் வசதி:

Hyundai Exter கார் 5 இருக்கைகளை கொண்டது. இது 391 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது.

Maruti Suzuki Fronx 5 இருக்கைகளை கொண்டது. 308 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 37 லிட்டர் பெட்ரோல் வசதி கொண்டது. 

பாதுகாப்பு:

Hyundai Exter காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஓட்டுநர், முன்பக்க பயணி, 2 கர்டைன், ஓட்டுனர் பக்கம், முன்பக்க பயணி பக்கம் உள்ளது. 80 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் 1 பீப் சத்தம் வரும். 120 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தொடர்ச்சியாக பீப் சத்தம் வரும்

Maruti Suzuki Fronx காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. ஓட்டுநர், முன்பக்க பயணி, 2 கர்டைன், ஓட்டுனர் பக்கம், முன்பக்க பயணி பக்கம் உள்ளது. 80 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் 1 பீப் சத்தம் வரும். 120 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் தொடர்ச்சியாக பீப் சத்தம் வரும்

ப்ரேக் வசதி:

Hyundai Exter காரில் டிஸ்க், ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. ஆன்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது.  இபிஎஸ் எனப்படும் எலக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோக்ரம் வசதி இல்லை. ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வசதி இல்லை. ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் வசதி இல்லை.

Maruti Suzuki Fronx காரில் டிஸ்க், ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. ஆன்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. இபிஎஸ் எனப்படும் எலக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூசன் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி ப்ரோக்ரம் வசதி உண்டு. ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வசதி உண்டு. ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது.

வண்ணங்கள்:

Hyundai Exter கார் 13 நிறங்களில் உள்ளது.

Maruti Suzuki Fronx 10 வண்ணங்களில் உள்ளது.

ஒரு காரை வாங்குவதற்கான அடிப்படை விஷயங்களை ஒப்பிட்டு மேலே தரவுகள் உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI