இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக ஹுண்டாய் நிறுவனம் உள்ளது. பட்ஜெட் கார்கள் முதல் அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு கார்கள் வரை பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகின்றனர். சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஓணம் என்று பல பண்டிகைகளை கொண்ட இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஹுண்டாய் நிறுவனம் 10 கார்களுக்கு தள்ளுபடி அறிவித்தது. 

ஹுண்டாய் நிறுவனம் அறிவித்த தள்ளுபடி இன்னும் 11 நாட்களில் நிறைவடைய உள்ளது. Grand i10 Nios, Aura, Exter,  i20 (including i20 N Line), Venue (including Venue N Line), Verna , Creta, Alcazar Facelift, Tucson, Ioniq 5 ஆகிய 10 கார்களுக்கு சலுகை அறிவித்தனர். 

இந்த 10 கார்களில் கிராண்ட் ஐ10 நியாஸ் முதல் வெனுயூ வரை உள்ள கார்கள் நடுத்தர குடும்பத்திற்கான பட்ஜெட் கார்கள் ஆகும். இந்த கார்களுக்கான சலுகைகளும் இன்னும் 11 நாட்களில் முடிவடைய உள்ளது. இந்த கார்களின் விலை என்ன? சலுகை என்ன? என்பதை கீழே காணலாம். 

1. Grand i10 Nios:

நடுத்தர குடும்பத்தினர் மற்றும் பட்ஜெட் கார் வாங்க விரும்புபவர்களின் முதன்மைத் தேர்வாக Grand i10 Nios கார் உள்ளது. ஹேட்ச்பேக் வகை காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.92 லட்சம் ஆகும். இந்த காருக்கு ஆகஸ்ட் மாத தள்ளுபடியாக ஹுண்டாய் 70 ஆயிரம் அறிவித்துள்ளது. இது பட்ஜெட் கார் வாங்க விரும்புபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் மிகுந்த சாலைகளில் ஓட்ட இந்த கார் உகந்தது. 

2.Aura:

ஹுண்டாய் நிறுவனத்தின் Aura காரின் தொடக்க விலை ரூபாய் 6.48 லட்சம் ஆகும். செடான் வகை காரான இந்த காருக்கு 55 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளனர். 5 இருக்கைகள் கொண்ட இந்த கார் 1197 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 37 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் வகையில் இந்த காரின் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

3.  Exter:

ஹுண்டாயின்  Exter காரின் தொடக்க விலை ரூ.6.20 லட்சம் ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜியில் ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு 55 ஆயிரம் ரூபாய் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 கியர் கொண்ட இந்த கார் 37 லிட்டர் பெட்ரோல் நிரப்பும் வகையில் டேங்க் கொண்டது. 5 கியர்கள் இந்த காரில் உள்ளது. 

4. i20:

நடுத்தர குடும்பத்தினரின் முதன்மைத் தேர்வாக இருப்பது i20 கார் ஆகும். ஹுண்டாயின் வெற்றிகரமான படைப்புகளில் இந்த காரும் ஒன்றாகு்ம். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.04 லட்சம் ஆகும். ஹேட்ச்பேக் காரான இந்த கார் 5 இருக்கைகள் கொண்டது ஆகும். 1197 சிசி எஞ்ஜின் கொண் இந்த காருக்கு 65 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

5. Venue:

மிகவும் கம்பீரமான தோற்றம் கொண்ட கார் Venue ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.94 லட்சம் ஆகும். எஸ்யூவி ரக காரான இந்த கார் 5 இருக்கைகள் கொண்ட கார் ஆகும். 1197 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட இந்த காருக்கு 85 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர். இந்த கார் 45 லிட்டர் பெட்ரோல் தாங்கும் டேங்க் திறன் கொண்டது.

 


Car loan Information:

Calculate Car Loan EMI