சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 21-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேடவாக்கம்
முன்னாள் படைவீரர் காலனி, ஏரிக்கரை மெயின் ரோடு, பெரும்பாக்கம் மெயின் ரோடு.
ஜல்லடியன்பேட்டை
ஜெயச்சந்திரன் நகர், வீரத்தம்மன்கோயில் தெரு, ரைஸ்மில் ரோடு.
பள்ளிக்கரணை
மீனாட்சி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், பசும்பொன் நகர், பாண்டியன் நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரி நகர்.
பெரும்பாக்கம்
கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சௌமியா நகர், நூக்காம்பாளையம்மன் ரோடு, சேரன் நகர், காந்தி நகர் சொசைட்டி, ஆதினி தெரு, சேகரன் நகர், எம்பசி ரெசிடென்சி, காசாகிராண்ட் First சிட்டி, குளோபல் மருத்துவமனை மெயின் ரோடு.
புளியந்தோப்பு
பவுடர் மில்ஸ் சாலை, வீராசெட்டி தெரு, பார்த்தசாரதி தெரு, கோவிந்த் சிங் தெரு, பிரகாஷ் ராவ் காலனி, டிகோஸ்டர் சாலை, சாஸ்திரி நகர் 1 முதல் 22-வது தெரு, நரசிம்மா நகர் 1 முதல் 5-வது தெரு, டிவிகே நகர் 1 முதல் 8-வது தெரு, சத்தியவாணி முத்து நகர் 1 முதல் 5-வது தெரு, காவாங்கரை தெரு, கஸ்தூரி பாய் காலனி A மற்றும் B பிளாக் 1 முதல் 5-வது தெரு.
நம்மாழ்வார்பேட்டை
சுப்பராயன், ராமானுஜன் கார்டன் தெரு, சந்தியப்பா தெரு, சின்னபாபு தெரு, கொன்னூர் ஹை ரோடு, பொதுப்பணித்துறை குவார்ட்டர்ஸ், பராக்கா சாலை, நல்லையா தெரு, செக்ரடேரியட் காலனி 4-வது மற்றும் 5-வது தெரு.
திருமுல்லைவாயல்
ஆர்ச் ஆண்டனி நகர், போதூர்.
திருவான்மியூர்
சாஸ்திரி நகர் திருவள்ளுவர் சாலை, கிழக்கு தெரு, வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1-வது தெரு, 2-வது தெரு, கலாசேத்ரா சாலை, பாலு அவென்யூ.
முடிச்சூர்
சுவாமி நகர், நவபாபி புல்லா நகர், சிவா விஷ்ணு நகர், கொம்மியம்மன் நகர், லிங்கம் நகர், அண்ணா தெரு மற்றும் ராஜராஜன் தெரு.
அடையாறு
இந்திரா நகர் 1-வது தெரு முதல் 3-வது மெயின் ரோடு, கஸ்தூரிபாய் நகர் 1-வது குறுக்குத் தெரு முதல் 3-வது குறுக்குத் தெரு, கெனால் பேங்க் சாலை, பத்தவச்சலம் 1-வது மற்றும் 2-வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.