Hyundai Creta N Line: ஹுண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா என் லைன் மாடலில் உள்ள, வசதிகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ஹுண்டாய் கிரேட்டா N Line:
சில வாரங்களுக்கு முன்பு ஹூண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா மாடலுக்கான ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட க்ரெட்டா என் லைன் குறித்த செய்திகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளன. புனேவில் நடைபெற்ற விளம்பர படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட அந்த SUV-யின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன. இந்த மாடலானது ஏற்கனவே ஹூண்டாய் வென்யூ என் லைன் மற்றும் ஐ20 என் லைன் ஆகியவற்றில் இருக்கும் பிட்களைக் கொண்டுள்ளது.
கிரேட்டா N Line நிறங்கள்:
SUVயின் முழு கீழ் பகுதியிலும் சிவப்பு லைனுடன், ஸ்போர்ட்டியர் தோற்றத்தை கொடுக்கும் வகையில் N லைன் மாடலானது முன் மற்றும் பின்புற பம்ப்பர்கள் போன்ற குறிப்பிட்ட வடிவமைப்பு கூறுகளைப் பெறும். நிலையான கிரேட்டாவில் கிடைக்கும் 16 மற்றும் 17 இன்ச் சக்கரங்களுடன் ஒப்பிடும்போது, கார் பெரிய 18-இன்ச் சக்கரங்களில் இயங்குவதாகத் தெரிகிறது. புதிய எஸ்யுவி எடிஷன் ஆனது நீலம் மற்றும் மேட் சாம்பல் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. உட்புறத்தில் ஸ்டேண்டர்ட் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரேட்டாவில் உள்ள டூயல்-டோன் சலுகையைப் போலல்லாமல், கிரேட்டா என் லைன் முழுக்க முழுக்க கருப்பு நிற தீமைப் பெற்றுள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
கிரேட்டா என் லைன் புதிய 1.5-லிட்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலையான க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டில் 160hp மற்றும் 253Nm டார்க்கை உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஹூண்டாய் ஸ்போர்ட்டியர் க்ரெட்டாவை 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடனும் வழங்க முடியும். இது வெர்னா போன்ற மற்ற மாடல்களில் உள்ளது. இன்ஜினைத் தவிர மற்ற N லைன் மாடல்களைப் போலவே கிரேட்டா N லைன் எடிஷனும், மறுசீரமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு, மறுவேலை செய்யப்பட்ட ஸ்டீயரிங் டைனமிக்ஸ் மற்றும் ஸ்போர்ட்டியர் எக்ஸாஸ்ட் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது அறிமுகம்?
எஸ்யூவி சோதனை ஓட்டங்கள் அனைத்தும் முடிந்து விளம்பரப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அடுத்து, புதிய ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் விரைவில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், ஹூண்டாய் இந்தியா 10,000 க்கும் மேற்பட்ட N லைன் வாகனங்களை விற்றது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் COO தருண் கார்க் கூறுகையில் , “நாங்கள் இந்தியாவில் மிக விரைவில் அதிக N லைன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவோம், மேலும் விற்பனை அடுத்த சில ஆண்டுகளில் 15,000-20,000 யூனிட்களை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
Car loan Information:
Calculate Car Loan EMI