Hyundai Creta facelift: ஹுண்டாய் நிறுவனத்தின் கிரேட்டா 2024 ஃபேஸ்லிப்ட் மாடலில் ADAS தொழில்நுட்பம் போன்ற பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஹுண்டாய் கிரேட்டா ஃபேஸ்லிப்ட் 2024:


கடந்த மூன்று ஆண்டுகளாக, ஹூண்டாய் க்ரெட்டா இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றாக உள்ளது இதுவரை 9.5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்த காரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நிலையில் தான் அதன் ஃபேஸ்லிப்ட் மாடல் வரும் 16ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அதை முன்னிட்டு கிரேட்டா ஃபேஸ்லிப்ட்  தொடர்பான கூடுதல் தகவல்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கிரேட்டா விற்பனைக்கு வரும்போது, ​​விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்க உதவும் பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


ஹுண்டாய் கிரேட்ட 2024 பாதுகாப்பு அம்சங்கள்:


ஹூண்டாய் வெளியிட்ட படங்கள் புதிய கிரேட்டா ஃபேஸ்லிப்டில் ஆறு ஏர்பேக்குகள் இடம்பெற்று இருக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த மாடலின் உயர்ரக வேரியண்ட்களான SX Tech மற்றும் SX(O) ஆகிய இரண்டிலும் 19 செயல்பாடுகளை கொண்ட ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் லெவல் 2 ADAS தொகுப்பு பொருத்தப்பட்டிருக்கும். அதாவது 360-டிகிரி கேமராக்கள், பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு அமைப்பு, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகிய அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். ஹூண்டாய் கிரேட்டாவின் உடல் வடிவமைப்பு வலுவூட்டப்பட்டதாகவும், விபத்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் என்சிஏபி பாதுகாப்பு சோதனையில் சிறந்த புள்ளிகளை பெறும் இலக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.


ஹுண்டாய் கிரேட்டா 2024 புதிய தொழில்நுட்பங்கள்:


புதிய கிரேட்டாவின் உயர்ரக வேரியண்ட்களில் புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், காற்றோட்டமான முன் இருக்கைகள், எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் புதிய 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவ் டிஸ்ப்ளே ஆகியவை கிடைக்கின்றன. அதோடு, முன்பு கிடைத்த 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரையும் தொடர்கிறது.


கிரேட்டா ஃபேஸ்லிஃப்ட்டிற்கான முன்பதிவுகளை ஹூண்டாய் தொடங்கியுள்ளது. அதன் டெலிவரி ஜனவரி பிற்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் கிரேட்டா ஃபேஸ்லிஃப்ட் விலைகள் வெளியிடப்பட்டவுடன், இது  நடுத்தர அளவிலான எஸ்யூவி பிரிவில் கியா செல்டோஸ் ,  மாருதி கிராண்ட் விட்டாரா,  ஹோண்டா எலிவேட்  மற்றும்  ஃபோக்ஸ்வேகன் டைகன் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரேட்டா ஃபேஸ்லிப்ட் ஆனது 7 வேரியண்ட்களில் கிடைக்கப்பெறும் என ஹுண்டாய் நிறுவனம் ஏற்கனவே உறுதி செய்துள்ளது. அதன்படி,  E, EX, S, S(O), SX, SX Tech மற்றும் SX (O) ஆகிய ஏழு வேரியண்ட்களில் இந்த கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது.  6 ஒற்றை நிறங்களிலும், ஒரு டூயல்-டோன் நிறத்திலும் விற்பனைக்கு வர உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI