இந்திய சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்திற்கு தனி வரவேற்பு உள்ளது. ஹுண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் முக்கியமான Hyundai Creta ஆகும். தற்போது கார் வாங்க விரும்பும் பலரது முக்கியமான தேர்வாக இந்த Hyundai Creta கார் உள்ளது. இந்த காரின் சிறப்பம்சம் என்னென்ன? விலை, மைலேஜ் எப்படி? என்பதை கீழே காணலாம்.
Hyundai Creta:
mid-size SUV ரக காரான இந்த கார் பல்வேறு வசதிகளையும், சொகுசான உணர்வையும் ஓட்டுநருக்கும், பயணிகளுக்கும் அளிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் 360 டிகிரி கேமராவும், பனோராமிக் சன்ரூஃப் மேற்கூரையும் உள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ்களை கொண்டது இந்த கார்.
1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பெட்ரோல் காரில் பொருத்தப்பட்டுள்ளது. 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் டீசல் காருக்கு பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் கார் 114 பிஎச்பி ஆற்றலும், டீசல் கார் 113 பிஎச்பி ஆற்றலும் கொண்டது. 250 என் எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்த காரில் மொத்தம் 70 வேரியண்ட்கள் உள்ளது.
விலை எப்படி?
இதன் தோற்றத்திற்காகவும், உட்கட்டமைப்பு வசதிக்காகவும் இந்த கார் பலராலும் விரும்பப்படுகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 13.40 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 25.46 லட்சம் ஆகும். நெருக்கடியான போக்குவரத்து கொண்ட நகர்ப்புறங்களில் 16 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. நெடுஞ்சாலையில் 22 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
பாதுகாப்பு:
ADAS வசதி இந்த காரில் உள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. அனைத்து இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் உள்ளது. Blind-spot View Monitor வசதியும் கொண்டது. எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் வசதியும் கொண்டது. எல்இடி முகப்பு விளக்குகள் கொண்டது. இந்த காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 5க்கு 4.7 ஸ்டார் அளித்துள்ளனர்.
வோக்ஸ்வோகன் டைகன், கியோசெல்டாஸ், வெனுயூ, அர்பன் கார்களுக்கு போட்டியாக இந்த கார் திகழ்கிறது. இந்த காரின் ஆட்டோமெட்டிக் டீசல் வேரியண்ட் எதிர்பார்த்த மைலேஜை தரவில்லை என்று கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI