18 நிமிடம் சார்ஜ் செய்தால் 75 கிமீ ஓடக்கூடிய Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு இன்று துவங்கியது. ஓலா ஸ்கூட்டரை வெறும் ரூ.499 செலுத்தி இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் இவர்களுக்கு விற்பனையின்போது முன்னுரிமை அளிக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.11544Wh பேட்டரியை 50 சதவீதம் சார்ஜ் செய்ய 18 நிமிடங்கள் போதுமானதாக உள்ளது. இதில் 75 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ஒரு மணி நேரம் ஆகும் நிலையில், இதன் மூலம் 100முதல் 150 கிமீ தூரம் வரைப் பயணிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சம் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் அளவில் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் செயலி சார்ந்து இயங்கும் கீ லெஸ் வசதி வழங்கப்படும் என்றும் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் வசதிகள் அமையவுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவை செய்வது எப்படி ?
1. https://olaelectric.com/ என்கிற வலைத்தளத்துக்குச் செல்லவும். அதில் ’Reserve for 499' ஐ க்ளிக் செய்யவும்
2. அடுத்த பக்கத்தில் உங்களது பத்து இலக்க மொபைல் எண்ணைப் பதிவிடவும்.
3. அந்தப் பக்கம் கேட்கும் கேள்விக்கான பதிலை கீழே காண்பது போன்று ‘க்ளிக்’ செய்யவும்.
4. உங்களுக்கான ஒன் டைம் பாஸ்வோர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அதனை அந்தப் பக்கத்தில் பதிவிடவும்.
5. அடுத்த பக்கத்தில் உங்களுக்கான கணக்கைத் தொடங்குவதற்கான உங்களது முழுப்பெயர் மற்றும் ஈ-மெயில் ஐடி உள்ளிட்ட தகவல்களைப் பதிவிடவும்.
6. முன்பணமாகக் கட்ட வேண்டிய 499 ரூபாயைச் செலுத்துவதற்கான பக்கத்துக்கு உங்களை அது அழைத்துச் செல்லும்.
7. பணம் செலுத்திய பிறகு உங்களுக்கான ஸ்கூட்டர் ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது என்கிற செய்தி உங்களுக்கு அனுப்பப்படும்.
Also Read: ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடக்கம்; ரூ.499 செலுத்தினால் விற்பனையின்போது முன்னுரிமை..!
Car loan Information:
Calculate Car Loan EMI