காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பிரியாணி அபிராமியை தமிழ்நாடு அவ்வளவு எளிதாக மறந்திருக்காது. டிக் டேக் வீடியோ மூலம் பிரபலமாகி, பிரியாணி கடைக்காரருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தான், பெற்ற குழந்தைகளையே விஷம் வைத்து கொலை செய்த கொடூர குற்றவாளியாக, குற்றம் சாட்டப்பட்டவர் தான் இந்த பிரியாணி அபிராமி.
யார் இந்த பிரியாணி அபிராமி ?
இந்த கொலைச் சம்பவம் 2018 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடைபெற்றது, சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். விஜய் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.
கள்ளக்காதலும் பிரியாணியும்
டிக் டேக் மற்றும் ரீல்ஸ் மூலம் பிரபலமாக அபிராமி வலம் வந்துள்ளார். அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் தொடர்ந்து, பிரியாணி வாங்குவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். அந்தவகையில் அந்த பிரியாணி கடைகள் பணியாற்றி, மீனாட்சி சுந்தரம் என்கிற சுந்தரம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் காதல் துளிர்விடத் தொடங்கியுள்ளது.
தனிமையில் சந்தித்து உல்லாசம்
சுந்தரம் காதல் வயப்படவே, அபிராமிக்கு இலவசமாக பிரியாணி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பிரியாணியில் துவங்கிய இவர்களுடைய காதல் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிக்கும் அளவிற்கு, வளர்ந்துள்ளது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். அபிராமியின் குடும்பத்தினர், "உனக்கு திருமணம் நடைபெற்று விட்டது குழந்தைகளும் இருக்கிறார்கள் இது போன்ற தவறான பாதைக்கு செல்லாதே" என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
கொடூர முடிவெடுத்த பிரியாணி அபிராமி
இதனால் அபிராமியும் சுந்தரமும் சென்னையைவிட்டு, கேரளாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு அவர்கள் எடுத்த முடிவு தான், கொடூரத்தின் உச்சமாக மாறியது. கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற அபிராமி முடிவு எடுத்தார். தனது கணவர் விஜய் மற்றும் அஜய், கார்னிகா ஆகியோரை கொலை செய்ய அபிராமி முடிவு செய்தார்.
குன்றத்தூரில் தூக்க மாத்திரைகளை வாங்கிய அபிராமி, அதைப் பாலில் கலந்து 3 பேருக்கும் இரவு கொடுத்துள்ளார். ஆனால் வீரியம் இல்லாததால் கார்னிகா மற்றும் உயிரிழந்து உள்ளார். வழக்கம்போல் விஜய் மறுநாள் காலை எழுந்து வேலைக்கு சென்றுள்ளார். அதேபோன்று மகன் அஜய் மயக்கத்தில் இருந்து உள்ளார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது
அபிராமி, அஜய்க்கு மீண்டும் பாலில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். அதன் பிறகு அஜய் உயிரிழந்ததை உறுதி, செய்த பிறகு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இது தொடர்பான ஆடியோக்கள் அப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அபிராமி கேரளாவிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
விமர்சனங்களை சந்தித்த "பிரியாணி அபிராமி"
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அபிராமிக்கு பிரியாணி அபிராமி என பெயர் வைக்கப்பட்டு, கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலை செய்து, அபிராமிக்கு வழக்கறிஞர்கள் சார்பாகவும் எதிர்ப்புகள் கிளம்பின. அபிராமியின் பெற்றோரும், அபிராமியை கைவிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின.
பிரியாணி அபிராமி வழக்கில் இன்று தீர்ப்பு
இது தொடர்பான வழக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றம் துவங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அபிராமி மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகிய இருவரும் ஆஜர் ஆகினர். இதனைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பிரியாணி அபிராமி வழக்கில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை-24) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.