பிரபல ஹோண்டா நிறுவனம் ஏழு புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே விற்பனையில் உள்ள 3 மாடல்களின் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம். 

Continues below advertisement

சந்தையில் கலக்கும் ஹோண்டா நிறுவனம்

ஆட்டோமொபைல் துறையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன சந்தையில் ஹோண்டா நிறுவனம் தனித்துவமான அடையாளத்துடன் திகழ்கிறது. கியர்களுடன் கூடிய பைக் மற்றும் ஸ்கூட்டி மாடல் இரு சக்கர வாகனங்களுடன் தற்போது மின்சார வாகனங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. சராசரி விலை, நீடித்த உழைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மக்கள் ஹோண்டா நிறுவன வாகனங்களை விரும்பி வாங்குகின்றனர். 

Continues below advertisement

ஒரே நேரத்தில் 10 பைக்குகள் அறிமுகம்

இப்படியான நிலையில் ஹோண்டா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் ஏழு புதிய தயாரிப்புகள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட 3 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாகும். இந்த புதிய தயாரிப்பு வரிசையானது அட்வென்ச்சர் ஸ்கூட்டர்கள், க்ரூஸர்கள், ரோட்ஸ்டர்கள், இரட்டைப் பயன்பாட்டு மோட்டார்சைக்கிள்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் மாடல்கள் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

எரிபொருள் சிக்கனம் மற்றும் மலிவு விலை ஆகியவற்றை தாண்டி தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை நாடும் மக்களின் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக்குகளின் விலைகள் மற்றும் சிறப்புகள் பற்றி படிப்படியாக தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read: Bajaj Electric Motorcycle: சிறப்பான அறிவிப்பு.. இ-பைக்கை அறிமுகம் செய்யும் பஜாஜ்.. எப்போ தெரியுமா?

10 பைக்குகளின் சிறப்புகள் 

ஹோண்டா ADV160 என்ற அட்வென்ச்சர்-ஸ்டைல் ​​ஸ்கூட்டர் இதில் ஒன்றாகும். 160சிசி லிக்விட்-கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படும் இந்த  வார இறுதியில் நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்ற ஒரு பிரீமியம் வாகனமாக உள்ளது.  85 சதவீதம் வரையிலான எத்தனால் கலந்த எரிபொருளுடன் இயங்கும்  இந்தியாவின் முதல் ஸ்கூட்டராக ADV160 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் 8 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல்ஆயில் கூலருடன் கூடிய 501சிசி ஒற்றை சிலிண்டர், காற்று குளிரூட்டப்பட்ட இன்ஜின் வசதிகளுடன் கூடிய CB500 என்ற ரோட்ஸ்டர் பைக், அப்டேட் செய்யப்பட்ட CB350, CB350C மற்றும் CB350RS ஆகியவையோடு ஹோண்டா ரெபெல் 300 பைக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ரெபெல் 500 பைக்கை மீண்டும் சந்தைக்கு கொண்டு வர ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

மேலும் சாகசப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த XR300L சாலைப் பயணத்திற்கும், கரடுமுரடான பாதைகளில் பயணிப்பதற்கும்  ஏற்ற வகையில் வரவுள்ளது. XR300L உடன் இணைந்து வரும் XR300 Rally  மற்றும் ஹோண்டா QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவையும் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI