Honda Elevate: ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலிவேட் கார் மாடலின் விலையை 58 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.


ஹோண்டா எலிவேட் விலை உயர்வு:


ஹோண்டா கார் நிறுவனம் தனது எலிவேட் மாடலின் விலையை, இந்திய சந்தையில் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த காம்பேக்ட் எஸ்யுவியின் விலை தற்போது 58 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த கார் மாடல் எதிர்கொள்ளும் முதல் விலை அதிகரிப்பு நடவடிக்கை இதுவாகும். இதன் மூலம் இந்த காரின் விலை தற்போது 11 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, அதிகபட்சமாக 16 லட்சத்து 48 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு, PEARL நிற காருக்கான விலை மட்டும் கூடுதலாக 8 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விலை உயர காரணம் என்ன? 


உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சில மாடல்களின் விலையை உயர்த்த இருப்பதாக, கடந்த ஆண்டே ஹோண்டா நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி, தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையால் 11 லட்சம் தொடங்கி 16 லட்சம் வரை என்ற, ஹோண்டா எலிவேட்டின் பழைய விலைப்பட்டியல் முடிவுக்கு வந்துள்ளது. அறிமுகமான முதலே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலானது, அண்மையில் தான் 20 யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியது.


ஹோண்டா எலிவேட் இன்ஜின் விவரங்கள்:


ஹோண்டா எலிவேட் மாடலனது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 119bhp மற்றும்145Nm டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் டிரான்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.


ஹோண்டாவில் உள்ள அம்சங்கள்:


கொடுக்கும் பணத்திற்கு நிகரான அனைத்து அம்சங்களையும் இந்த கார் தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக, 10.25 இன்ச்  எல்சிடி டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. வயல்ர்லெஸ் சார்ஜிங், ஹோண்டா கனெக்ட், சாஃப்ட் டச் டோர், டேஷ்போர்ட் இன்செர்ட்ஸ் ஆகியவற்றோடு 7 இன்ச் TFT டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலும் உள்ளது.


ஹோண்டா எலிவேட்டின் பாதுகாப்பு அம்சங்கள்:


பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரையில் ஹோண்டா எலிவேட்டானது மேம்படுத்தப்பட்ட அட்வான்ஸ் டிரைவர் சிஸ்டம், மல்டி ஆங்கிள் ரியர்வியூ கேமராக்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பல அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. இதில் கிடைக்கும்  SV, V, VX மற்றும் ZX ஆகிய 4 டிரிம்களுமே பேஸ் வேரியண்ட்களாக மட்டுமே உள்ளன. இது இந்திய சந்தையில் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கியா செல்டோஸ்,ஃபோக்ஸ்வேகன் டைகன், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஆனால், இந்த மாதம் வெளியாக இருக்கும் ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் தான், எல்வேட் மாடலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI