ஹோண்டா நிறுவனம் தனது டியோ ஸ்கூட்டரின் மூன்றாவது வேரியண்டாக, H ஸ்மார்ட்டை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


எச் ஸ்மார்ட் டெக்னாலஜி:


எச் ஸ்மார்ட் டெக்னாலஜி என்பது ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 125 மாடலில் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது. அதன் அடுத்தகட்டமாக டியோ மாடலிலும் அந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எச் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் மூலம் ஆக்டிவா மாடலுக்கு வழங்கப்பட்டது போலவே, டியோ வேரியண்டிற்கு கீ-லெஸ் மற்றும் அல்லாய் வீல்கள் போன்ற அம்சங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த வாகன மாடல் விற்பனைக்கு வரும்போது அதிக ரேஞ்ச் கொண்ட டியோ வேரியண்டாகவும், குறைந்த விலை கொண்ட எச். ஸ்மார்ட் ஸ்கூட்டர் எனும் அந்தஸ்தையும் பெற உள்ளது.


டியோ வேரியண்ட்:


புதிய வேரியண்ட் டியோ H-ஸ்மார்ட் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. புதிய மாடல் அறிமுகமாகும் பட்சத்தில்- டியோ DLX, Sports DLX, Sports STD மற்றும் STD வரிசையில், ஹோண்டா அறிமுகம் செய்யும் ஐந்தாவது வேரியண்டாக இது இருக்கும். டியோ H ஸ்மார்ட் வேரியண்டில் அதிக அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.


இன்ஜின் விவரம்:


புதிய மாடலில் 109சிசி, சிங்கில் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இது 7.8 ஹெச்பி பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. விலையை பொருத்தவரை இந்த ஸ்கூட்டர் அதன் ஸ்டாண்டர்டு மற்றும் DLX வேரியண்ட்களை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா டியோ ஸ்டாடண்டர்டு மாடல் விலை ரூ. 68 ஆயிரத்து 625 என்றும் டியோ DLX வேரியண்ட் விலை ரூ. 72 ஆயிரத்து 626 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டியோவின் வரவிருக்கும் எச்-ஸ்மார்ட் வேரியண்ட், ஆக்டிவாவைப் போலவே, டிஎல்எக்ஸ் மாறுபாட்டை விட சற்று அதிகமாக இருக்கும்.


சிறப்பம்சங்கள்:


இதில் கீலெஸ் வசதி மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் புதிய வேரியண்டில் ஸ்மார்ட் ஃபைண்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் பட்டனை க்ளிக் செய்ததும் ஸ்கூட்டரின் இண்டிகேட்டர்களை ஃபிளாஷ் செய்யும். கூட்டம் மிகுந்த இடங்களில் கூட, பயனாளர்கள் தங்களது வாகனங்களை கண்டறிஒய இந்த வசதி பயன்படும். இத்துடன் ஸ்மார்ட் ஸ்டார்ட் அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட் அன்லாக் அம்சம் மூலம் பயனர்கள் ஃபியூவல் ஃபில்லர் கேப், ஹேண்டில்பார் மற்றும் அண்டர்சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகளை அன்லாக் செய்ய முடியும். ஹோண்டா டியோ H ஸ்மார்ட் மாடலில் ஸ்மார்ட்சேஃப் (Smartsafe) எனும் அம்சமும் வழங்கப்படுகிறது. இது ஸ்கூட்டரை லாக் செய்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. இவைதவிர டியோ ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.  


Car loan Information:

Calculate Car Loan EMI