ஜிஎஸ்டி வரி குறைப்பின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பொருட்களின் விலையும் பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக, இந்திய வாகன சந்தையில் கார், பைக்குகளின் விலை மிகப்பெரிய அளவு குறைந்துள்ளது.
பைக் மற்றும் கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஹோண்டா நிறுவனமும் ஜிஎஸ்டி வரி குறைப்பால் தனது கார்களின் விலையை பெருமளவு குறைத்துள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான காரான Honda City காரின் விலையும் குறைந்துள்ளது.
Honda City காரின் எந்த வேரியண்ட் எவ்வளவு விலை குறைந்துள்ளது? என்பதை கீழே காணலாம்.
1.SV MT:
ஹோண்டா சிட்டியில் SV MT காரின் பழைய விலை ரூபாய் 12 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 42 ஆயிரத்து 700 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 11 லட்சத்து 95 ஆயிரத்து 300 ஆகும்.
2. V MT:
ஹோண்டா சிட்டியின் V MT காரின் பழைய விலை ரூபாய் 13 லட்சத்து 14 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் விலை தற்போது ரூபாய் 45 ஆயிரத்து 400 குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபாய் 12 லட்சத்து 69 ஆயிரத்து 500 ஆகும்.
3. V CVT:
Honda Cityயின் V CVT காரின் பழைய விலை ரூபாய் 14 லட்சத்து 39 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 13 லட்சத்து 90 ஆயிரத்து 200 ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 49 ஆயிரத்து 700 குறைக்கப்பட்டுள்ளது.
4. VX MT:
ஹோண்டா சிட்டியில் VX MT காரின் பழைய விலை ரூபாய் 14 லட்சத்து 21 ஆயிரத்து 900 ஆகும். இந்த கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 49 ஆயிரத்து 100 குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தற்போதைய விலை ரூபாய் 13 ஆயிரத்து 72 ஆயிரத்து 800 ஆகும்.
5. VX CVT:
இந்த VX CVT வேரியண்ட் ரூபாய் 15 லட்சத்து 46 ஆயிரத்து 900க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த கார் தற்போது ரூபாய் 53 ஆயிரத்து 400 விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் புதிய விலை ரூபாய் 13 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆகும்.
6. VX CVT:
ஹோண்டா சிட்டியின் VX CVT காரின் பழைய விலை ரூபாய் 15 லட்சத்து 46 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 14 லட்சத்து 93 ஆயிரத்து 500 ஆகும். இந்த கார் தற்போது ரூபாய் 53 ஆயிரத்து 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
7. ZX MT:
ஹோண்டா சிட்டியின் ZX MT காரின் பழைய விலை ரூபாய் 15 லட்சத்து 39 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 14 லட்சத்து 86 ஆயிரத்து 800 ஆகும். இந்த கார் ரூபாய் 53 ஆயிரத்து 100 விலை குறைத்துள்ளனர்.
8. ZX CVT:
ஹோண்டா சிட்டியின் ZX CVT காரின் பழைய விலை ரூபாய் 16 லட்சத்து 64 ஆயிரத்து 900 ஆகும். இதன் விலை ரூபாய் 57 ஆயிரத்து 500 குறைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூபாய் 16 லட்சத்து 7 ஆயிரத்து 400 ஆகும்.
9. Sports CVT:
ஹோண்டா சிட்டியின் இந்த Sports CVT காரின் விலை ரூபாய் 51 ஆயிரத்து 400 குறைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பழைய விலை ரூபாய் 14 லட்சத்து 88 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் புதிய விலை ரூபாய் 14 லட்சத்து 37 ஆயிரத்து 500 ஆகும்.
10. e:HEV:
ஹோண்டா சிட்டியின் e:HEV காரின் பழைய விலை ரூபாய் 19 லட்சத்து 89 ஆயிரத்து 900 ஆகும். இந்த காரின் விலை ரூபாய் 41 ஆயிரத்து 790 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த காரின் புதிய விலை ரூபாய் 19 லட்சத்து 89 ஆயிரத்து 900 ஆகும்.
ஹோண்டா சிட்டி 1498 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 18.4 லிட்டர் மைலேஜ் தருகிறது. 6 மற்றும் 7 கியர்களை கொண்டது. 6 வண்ணங்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI