இந்தியாவில் இன்றைய சூழலில் இரு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பலரும் இ ஸ்கூட்டர்களையே விரும்புகின்றனர். இதனால், கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இ ஸ்கூட்டர் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியுள்ளது.

Continues below advertisement

 Honda Activa e:

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Honda Activa ஆகும். இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த ஸ்கூட்டரின் மின்சார வெர்சனே Honda Activa e ஆகும். இதன் தரம், மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

Continues below advertisement

விலை என்ன?

Honda Activa e மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் உள்ளது. அதாவது, Activa e Standard மற்றும் Activa e Honda RoadSync Duo ஆகிய 2 வேரியண்ட்களில் உள்ளது. 

1. Activa e Standard  - ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 881 

2. Activa e Honda RoadSync Duo - ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 178 

இதன் விலை ஆகும். 

மைலேஜ்:

ஒரு முறை சார்ஜ் செய்தால் 102 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 60 கி.மீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. 22 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.  118 கிலோ எடை கொண்டது. 3 கிலோவாட் பேட்டரி கொண்டது. 

வாரண்டி:

இந்த இ ஸ்கூட்டர் நீலம், வெள்ளை, சாம்பல், கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களில் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 171 மி.மீட்டர் கொண்டது. அலாய் சக்கரங்களை கொண்டது. டியூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி Li-ion ஆகும். 3 ஆண்டுகள் வரை வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 50 ஆயிரம் கிலோ மீட்டர் வரை வாரண்டி உள்ளது. 

சிறப்பம்சங்கள்:

இதில் ப்ளூடூத், வைஃபை வசதி உள்ளது. ரிமோட் ஸ்டார்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் முறையும் உள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் 5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது டச் ஸ்கிரீன் ஆகும். இன்டர்நெட் வசதி இந்த இ ஸ்கூட்டரில் உள்ளதால் கூகுள் மேப் வசதி இதில் உள்ளது. 

ஸ்கூட்டரில் பேட்டரி குறைந்தால் அதை டிஸ்ப்ளேவில் காட்டும் Low Battery Indicator வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் மோட்டாருக்கு 3 வருடம் வாரண்டி உள்ளது. முன்பக்க ப்ரேக் டிஸ்க் ப்ரேக் ஆகும். ட்ரம் ப்ரேக்கும் உள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் விளக்குகள் எல்இடி ஆகும். 1125 மி.மீட்டர் உயரம் கொண்டது. 1854 மி.மீட்டர் நீளம் கொண்டது. இந்த இ ஸ்கூட்டரை பயன்படுத்தியவர்கள் இதற்கு 5க்கு 4.9 ஸ்டார் ரேட்டிங் அளித்துள்ளனர்.


Car loan Information:

Calculate Car Loan EMI