ஹோண்டா நிறுவனம்:


குறைந்த விலையில் தரமான வாகனங்களை வழங்குவதன் மூலம், பயனாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது ஹோண்டா நிறுவனம். மோட்டார் சைக்கிள் மட்டுமின்றி, இந்திய ஸ்கூட்டர் சந்தையிலும் இந்நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டரான ஆக்டிவாவின், புதிய மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஆக்டிவா 6ஜி அறிமுகம்:


ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம்.  புது மாடலை தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா மாடல்  ஸ்கூட்டர், தற்போது ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் அலாய் வீல் கொண்ட ஸ்மார்ட் கீ என மூன்று வித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


புதிய கீ-லெஸ் அம்சம்


இதில் உள்ள ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரில் கீலெஸ் வசதியை வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் ஹேண்டில்பாரை லாக் மற்றும் அன்லாக் செய்வது, இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜ் மற்றும் எரிபொருள் டேங்கிற்கான மூடியை திறப்பது உள்ளிட்டவைகளை சாவி இன்றி இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






இன்ஜின் விவரங்கள்:


ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டில் 109.51சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. அதோடு, கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், டிரம் பிரேக் மற்றும் ஒற்றை ரியர் ஸ்ப்ரிங், உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன.


கூடுதல் சிறப்பம்சங்கள்:


ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டில் ஆண்டி-தெஃப்ட் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. ஸ்கூட்டரில் உள்ள நாப்-போன்ற ஸ்விட்ச் கொண்டு மேலே உள்ள அம்சங்களை இயக்கலாம். இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைன் வழங்கப்பட்டு உள்ளது. இவை தவிர ஸ்கூட்டரின் ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் புதியதாக எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என, ஹோண்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புது ஆக்டிவா மாடல் விலை ரூ. 80 ஆயிரத்து 537, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் கிடைக்கும் ஆக்டிவாவின் மாடல்களான ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் ஸ்மார்ட் கீ ஆகியவை முறையே, ரூ.74,536, ரூ.77,036 மற்றும் ரூ.80,537 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. 


எலெக்ட்ரிக் ஆக்டிவா ஸ்கூட்டர்:


ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஹோண்டா எலெக்ட்ரிக் ஆக்டிவா ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எக்லெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 முதல் 100 கி.மீ என உள்ள சூழலில், புதிய ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கி.மீ ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI