இந்தியாவில் வாகன சந்தையில் வாடிக்கையாளர்களை குறிப்பாக நடுத்தர குடும்பத்தினரை கவர்வதற்காக முன்னணி நிறுவனங்கள் ஏராளமான பட்ஜெட் கார்களை பல்வேறு வசதிகளுடன் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நடுத்தர குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக ரூபாய் 8 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் கார்கள் எது? எது? என்று கீழே விரிவாக காணலாம்.
1. Maruti Suzuki Celerio:
மாருதி சுசுகி நிறுவனத்தின் நடுத்தர குடும்பத்தினருக்கான பட்ஜெட் தயாரிப்பு இந்த Celerio ஆகும். நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு ஏற்ற கார் இந்த கார் ஆகும். இதன் தொடக்க விலை ரூபாய் 5.65 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட்டே ரூபாய் 7.37 லட்சம் ஆகும். இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 26 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்களை கொண்டது இந்த கார். உள்புறமும், வெளிப்புறமும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் இந்த கார் உள்ளது. சிஎன்ஜி-யிலும் இந்த கார் உள்ளது.
2. Maruti Alto K10:
மாருதி நிறுவனத்தின் நடுத்தர குடும்பத்தினருக்கான மற்றொரு தரமான படைப்பு இந்த Alto K10 கார் ஆகும். இந்த கார் இந்தியாவின் சிறந்த ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூ. 4.23 லட்சம் ஆகும். அதிகபட்சமாக இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 6.21 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.
இந்த விலை ஷோரூம் விலை ஆகும். இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் இதில் உள்ளது. இந்த கார் 25 கி.மீட்டர் வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மைலேஜ் தருகிறது. இந்த காரும் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். 89 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7 இன்ச் தொடுதிரை டேஷ்போர்ட் கொண்டது. சிஎன்ஜியிலும் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. Maruti Suzuki wagonR:
மாருதி சுசுகியின் பட்ஜெட் காரில் அனைவருக்கும் பிடித்தமான கார்களில் ஒன்று Maruti Suzuki wagonR. மைலேஜை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட கார் இந்த கார் ஆகும். சிறிய ரக காரான இந்த ஹேட்ச்பேக் கார் 20 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. இதன் சிஎன்ஜி ரகம் 34 கி.மீட்டர் மைலேஜ் தருகிறது. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 5.78 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் ரூபாய் 7.62 லட்சம் ஆகும். 5 கியர்களை கொண்டது இந்த கார் ஆகும். 35 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது. 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட காரும் இதில் உள்ளது.
4. Tata Tiago :
டாடா நிறுவனத்தின் தரமான படைப்புகளில் ஒன்று Tata Tiago ஆகும். இந்த கார் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்டது. மொத்தம் 17 வேரியண்ட் இதில் உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.5 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். சிஎன்ஜி மாடலும் இதில் உள்ளது. 1.2 லிட்டர் ரிவோட்ரன் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1199 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இதுவாகும். 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இது 19 கி.மீட்டர்வரை மைலேஜ் தரும். டியாகோ மின்சார காரும் உள்ளது.
இந்த கார்கள் அனைத்தும் ஹேட்ச்பேக் ரக கார்கள் ஆகும். குறைந்த விலையில் தரமான கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் நடுத்தர குடும்பத்தினர் இந்த கார்களை முதன்மையாக தேர்வு செய்யலாம். மேலும், இந்த காரில் அதிகபட்சமாக 5 பேர் வரை பயணிக்கலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI