Hero VIDA VX2 Plus 4.4 kWh EMI: ஹீரோ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ப்ராண்டான விடாவின் VX2 Plus 4.4 kWh எடிஷன் விலை சென்னையில் சுமார் ரூ.1.50 லட்சமாக (எக்ஸ் - ஷோரூம்) உள்ளது.
ஹீரோ விடா VX2 Plus 4.4 kWh மின்சார ஸ்கூட்டர்:
நகர்ப்பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக, தினசரி அலுவலக பயன்பாடு மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கு, காரை காட்டிலும் மின்சார இருசக்கர வாகனங்களை பயன்படுத்த பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையிலான ஸ்கூட்டர்களை தேடுபவர்களுக்கான சிறந்த தேர்வாக ஹீரோ நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ப்ராண்டான விடாவின் VX2 Plus 4.4 kWh எடிஷன் இருக்கும். இந்த ஸ்கூட்டரை மலிவு விலையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விடா VX2 Plus 4.4 kWh மின்சார ஸ்கூட்டர் - ரூ.1.54 லட்சம்
விடாவின் VX2 Plus ஸ்கூட்டரின் 4.4 kWh பேட்டரி எடிஷன் அண்மையில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் எக்ஸ் - ஷோரூம் விலை சென்னையில் சுமார் ரூ.1.43 லட்சத்தில் தொடங்குகிறது. இதன் ஆன் ரோட் விலை சுமார் ரூ.1.54 லட்சம் வரை நீள்கிறது. Baas எனப்படும் வாடகை மூலம் பேட்டரியை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை தேர்வு செய்தால், வாகனத்தை மேலும் குறைந்த விலையில் சொந்தமாக்க முடியும். ஒருவேளை இந்த ஸ்கூட்டரை ஒரே அடியாக முழு தொகையையும் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறீர்களா? கவலை வேண்டாம். பல வங்கிகள் இருசக்கர வாகனங்களுக்கு தாராளமாக கடனுதவிகளை வழங்குகின்றன.
விடா VX2 Plus 4.4 kWh ஸ்கூட்டர் - ரூ.2,500 போதும்
பொதுவாகவே வங்கிக் கடன் உதவியுடன் வாகனங்களை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்துவிட்டு, கணிசமான தொகையை கடனாக பெறுவதே லாபகரமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடனை பெற முடியும். உதாரணமாக விடா VX2 Plus 4.4 kWh ஸ்கூட்டரின் டாப் வேரியண்டின் விலையான சுமார் ரூ.1.54 லட்சத்தில் 75 ஆயிரம் ரூபாயை டவுன் - பேமண்டாக செலுத்துவதாக கொள்வோம். மீதமுள்ள 79 ஆயிரம் ரூபாயை வங்கி மூலமாக கடனாக அணுகலாம். 3 வருடங்களில் 9.7 சதவிகித வட்டியில் கடனை பெற்றால், 36 மாதங்களுக்கு தலா சுமார் ரூ.2,500-ஐ தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அதன்படி, கூடுதலாக வட்டி மட்டுமே சுமார் ரூ.12 ஆயிரத்தை செலுத்துவீர்கள். ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாயில் இந்த காரை சொந்தமாக்கிக் கொள்வீர்கள்.
ஹீரோ விடா VX2 ப்ளஸ் 4.4KWh - மைலேஜ், ரேஞ்ச்
| அம்சங்கள் | விடா விஎக்ஸ்2 ப்ளஸ் 4.4KWh வேரியண்ட் |
| பேட்டரி | 4.4KWh |
| பேட்டரி கான்ஃபிகரேஷன் | இரண்டு அகற்றக்கூடிய 2.2KWh பேட்டரிகள் |
| சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் | 187கி.மீ., |
| நிஜ உலக எதிர்பார்ப்பு ரேஞ்ச் | 140கி.மீ., |
| அதிகப்படியான மோட்டார் அவுட்புட் | 6KW |
| அதிகப்படியான டார்க் | 26Nm |
| அதிகப்படியான வேகம் | மணிக்கு 90கி.மீ., |
| 0-40KM/h ஆக்சிலரேஷன் | 3.1 விநாடிகள் |
| ரைடிங் மோட்கள் | எகோ, ரைட், ஸ்போர்ட் |
| இருக்கைக்கு கீழே ஸ்டோரேஜ் | 27.2 லிட்டர் |
| வாகனத்தின் மொத்த எடை | 120 கிலோ |
| டிஸ்பிளே | 4.3 இன்ச் டிஎஃப்டி |
| ப்ரேக்கிங் | முன்புறம் டிஸ்க், பின்புறம் சிபிஎஸ் உடன் கூடிய ட்ரம் |
| டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் நேரம் | 65 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 80% |
ஹீரோ விடா VX2 ப்ளஸ் - அம்சங்கள், வசதிகள்
இந்த ஸ்கூட்டரில் முழுமையான LED விளக்குகள், ஸ்டெப் பை ஸ்டெப் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் கனெக்ட். ஓவர் தி ஏர் அப்டேட்கள், ரிவர்ஸ் மற்றும் பார்க் மோட்கள், ரிஜெனரேட்டிவ் ப்ரேக்கிங், இருவழி த்ராட்டில் ஃபங்க்சனாலிட்டி, ஒருங்கிணைந்த ப்ரேக்கிங் சிஸ்டம், முன் டிஸ்க் மற்றும் பின் டிரம் பிரேக்குகள், 12 இன்ச் அலாய் வீல்கள், இருக்கைக்கு அடியில் 27.2 லிட்டர் சேமிப்பு இடம், 4.8-லிட்டர் முன்புற சேமிப்புப் பகுதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் மேட் க்லாலோ லைம், நெக்சஸ் ப்ளூ, மேட் இன்ஸ்பைர்ட் ஒய்ட், பெர்ல் ரெட், பெர்ல் ப்ளாக், ஆடம் ஆரஞ்சு மற்றும் மெடாலிக் மேட் கன் மெடல் க்ரே ஆகிய 7 வண்ண விருப்பங்களில் ஒன்றை பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI