Hero Splendor Electric: ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளை மின்சார எடிஷனில், 2027ம் ஆண்டில் சந்தைக்கு கொண்டு வர ஹீரோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாம்.
ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் மின்சார எடிஷன்:
இந்தியாவில் பயனர்களால் மிகவும் நம்பத்தகுந்த மற்றும் விரும்பக்கூடிய மோட்டார் சைக்கிளான ஸ்ப்ளெண்டர் விரைவில் புதிய அவதாரம் எடுக்க உள்ளது. குறைந்த பராமரிப்பு செலவு, அட்டகாசமான மைலேஜிற்கு பெயர் பெற்ற, இந்த மோட்டார் சைக்கிளை மின்சார எடிஷனிற்கு அப்க்ரேட் செய்ய ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், அதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளாசிக் லுக், மாடர்ன் அம்சங்கள்:
மின்சார எடிஷன் ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பானது, தற்போது விற்பனையில் உள்ள வாகனத்தின் டிசைனை அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. அதேநேரம், மாடல் அம்சங்கள் பலவும் கூடுதலாக இணைக்கப்படக்கூடும். அதன்படி, வட்டவடிவிலான எல்இடி முகப்பு விளக்குகள், மேட் ஃபினிஷ் பேனல், டேங்க் மாதிரியான சேமிப்பு இடம் ஆகியவை வழங்கப்படலாம். இந்த மோட்டார் சைக்கிளானது மேட் ப்ளாக், ப்ளூ ஆக்செண்ட், சில்வர் மற்றும் பேர்ட்ல் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்கப்படலாம். சுமார் 110 கிலோ எடைக்குள் அடங்குவதால், போக்குவரத்து நெரிசலிலும் இந்த வாகனத்தை எளிதாக கையாளக்கூடும்.
பேட்டரி, செயல்திறன்
புதிய மின்சார எடிஷன் ஸ்ப்ளெண்டரானது 3KW BLDC மோட்டாரை கொண்டு, 255Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த வாகனம், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7 விநாடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்படுகிறதாம். 4KWh லித்தியம் - அயன் ரிமூவல் பேட்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதன்படி, முழுமையாக சார்ஜ் செய்யும்போது சிங்கிள் பேட்டரி எடிஷன் 120 கிலோ மீட்டர் ரேஞ்சையும், இரண்டு பேட்டரிகளை கொண்ட எடிஷன் 180 கிலோ மீட்டர் ரேஞ்சையும் வழங்கக் கூடும் என கூறப்படுகிறது. சாதாரண சார்ஜரில் 4 முதல் 5 மணி நேரத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் என்றும், ஃபாஸ்ட் சார்ஜரில் வெறும் ஒன்றரை மணி நேரத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஜின் அடிப்படையிலான ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பைக்கானது, லிட்டருக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்:
ஸ்ப்ளெண்டரின் புதிய மின்சார எடிஷனானது பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெறக்கூடும் என கூறப்படுகிறது. அதில்,
- செமி டிஜிட்டல் க்ளஸ்டர் & 4.59 இன்ச் எல்இடி ஸ்க்ரீன் (டாப் வேரியண்ட்களில்)
- ப்ளூடூத் கனெக்டிவிட்டி & லொகேஷன் ட்ராக்கிங்
- ரியல் டைம் டயக்னாஸ்டிக்ஸ் & யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்
- எல்இடி லைட்டிங் & சைட் - ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப்
- சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் & ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங் ஆகிய அம்சங்கள் வழங்கப்படலாம்
ஸ்ப்ளெண்டர் மின்சார எடிஷன் - விலை விவரங்கள்
மின்சார வாகனங்களுக்கான மானியம் ஆகியவற்றை கடந்த பிறகு, புதிய ஸ்ப்ளெண்டர் மோட்டர் சைக்கிளின் விலையானது, ரூ.1.05 லட்சத்தில் தொடங்கி ரூ. 1.30 லட்சம் வரை நீள வாய்ப்புள்ளது. ஆன் - ரோட் விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை இருக்கும். தற்போதைய இன்ஜின் அடிப்படையிலான ஸ்ப்ளெண்டர் பைக்கின் ஆன் - ரோட் விலை, 95 ஆயிரத்து 987 ரூபாயில் தொடங்கி 97 ஆயிரத்து 814 ரூபாய் வரை நீள்கிறது. 2027ம் ஆண்டு வாக்கில் ஸ்ப்ளெண்டரின் புதிய மின்சார எடிஷனானது சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI