இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் வாகனங்களை விற்பதன் மூலம், வாடிக்கையாளர்களிடையே ஹீரோ மோட்டோகர்ப் நிறுவனம் நன்கு அறிமுகமாகியுள்ளது. பைக்குகளுக்கான இந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையிலும் களமிறங்கி தனக்கான சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. அதேநேரம், சூழலுக்கு ஏற்ப தனது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை இந்திய சந்தையில் அவ்வப்போது உயர்த்தி வருகிறது.


விலையை உயர்த்திய ஹீரோ மோட்டோகார்ப்:


அந்த வகையில் தற்போது ஹீரோ பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் விலையை உயர்த்துவதாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இரு மாடல்களின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை தற்போது அதிகரித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதேநேரம்,  தற்போதைய விலை உயர்வில் டெஸ்டினி 125 மாடல் பாதிக்கப்படவில்லை.


அதிகபட்ச விலை ரூ.92,760:


பிலெஷர் பிளஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் புதிய விலை இந்திய சந்தையில் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ளது.  புதிய விலை உயர்வின் படி, ஹீரோ பிலெஷர் பிளஸ் மாடலின் விலை ரூ. 70 ஆயிரத்து 982 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 79 ஆயிரத்து 522 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மேஸ்ட்ரோ எட்ஜ் மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 816 என தொடங்கி, அதிகபட்சமாக ரூ. 92 ஆயிரத்து 760 என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


புதிய விலை விவரம்:


மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிரம் ரூ. 69 ஆயிரத்து 816


ஹீரோ பிலெஷர் பிளஸ் LX ரூ. 70 ஆயிரத்து 982


ஹீரோ பிலெஷர் பிளஸ் VX ரூ. 72 ஆயிரத்து 738


மேஸ்ட்ரோ எட்ஜ் 110 டிஸ்க் ரூ. 74 ஆயிரத்து 910


ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ரூ. 76 ஆயிரத்து 228


ஹீரோ பிலெஷர் பிளஸ் Xtec ஜூபிலண்ட் எல்லோ ரூ. 79 ஆயிரத்து 522


மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிரம் ரூ. 83 ஆயிரத்து 440


மேஸ்ட்ரோ எட்ஜ் 125 டிஸ்க் ரூ. 88 ஆயிரத்து 240


மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் ரூ. 88 ஆயிரத்து 660


மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ப்ரிஸ்மேடிக் / கனெக்டெட் ரூ. 92 ஆயிரத்து 760


சலுகைகளை வழங்கும் ஹீரோ மோட்டோகார்ப்:


மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. விலை உயர்வு தவிர குறிப்பிட்ட இரண்டு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரம், விலை உயர்வை அடுத்து வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், தொடர்ந்து நிதி சார்ந்த சலுகைகளை வழங்குவதாக அந்நிறுவனம்  தெரிவித்துள்ளது. ஏற்கனவே,  ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்,  குறுகிய காலத்திற்கு எக்சேன்ஜ் மற்றும் நிதி சலுகைகள் வழங்குவதாக அண்மையில் அறிவித்து குறிப்பிடத்தக்கது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI