ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிராண்டு விடா இந்தியாவில் தனது


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் வாகனங்களை விற்பதன் மூலம், வாடிக்கையாளர்களிடையே ஹீரோ மோட்டோகர்ப் நிறுவனம் நன்கு அறிமுகமாகியுள்ளது. பைக்குகளுக்கான இந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையிலும் களமிறங்கி தனக்கான சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. இதனிடையே, இந்தியாவில் அதிகரித்துள்ள மின்சார வாகனங்களின் விற்பனையை கருத்தில் கொண்டு, மின்சார ஸ்கூட்டர்களையும் அண்மையில் அறிமுகப்படுத்தியது. விடா என்ற பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான, முன்பதிவு டெல்லி, பெங்களூரு மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொகையாக ரூ.2,499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தான், விடா V1 மின்சார ஸ்கூட்டரின் முதல் யூனிட் பெங்களூரு நகரில் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ள விடா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரில் வைத்து மின்சார ஸ்கூட்டர்களின் வினியோகம் தொடங்கியது. இதையடுத்து விரைவில், டெல்லி மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களிலும் விடா V1 வினியோகம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் விடா V1 மின்சார ஸ்கூட்டர் விடா V1 பிளஸ் மற்றும் V1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.


விடா மின்சார ஸ்கூட்டரின் ப்ரோ வேரியண்ட் 3.94 கிலோவாட் ஹவர் பேட்டரியும், பிளஸ் வேரியண்ட் 3.44 கிலோவாட் ஹவர் பேட்டரியையும் கொண்டுள்ளது. இரு வேரியண்ட்களும் அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களின் அதிகபட்ச ஆற்றல் 6 கிலோ வாட் மற்றும் அதிகபட்ச இழுவிசை 25 நியூட்டன் மீட்டர் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. ப்ளஸ் வேரியண்ட் ஸ்கூட்டர் 5.15 மணி நேரத்திலும், ப்ரோ வேரியண்ட் ஸ்கூட்டர் 5.55 மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடா V1 பிளஸ் மாடல் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளிலும், விடா V1 ப்ரோ வேரியண்ட் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். ப்ளஸ் வேரியண்ட் ஸ்கூட்டர் 125 கிலோ எடையையும், ப்ரோ வேரியண்ட் 126 கிலோ எடையையும் கொண்டுள்ளது. இத்துடன் இகோ, ரைடு, ஸ்போர்ட் மற்றும் யூசர் கஸ்டமைசபில் என நான்கு வித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. 


ப்ளஸ் மற்றும் ப்ரோ மாடல் மின்சார ஸ்கூட்டர்கள் நிறம், பேட்டரி திறன் மற்றும் பிக்கப் வேகம் உள்ளிட்ட பிரிவுகளில் வித்தியாசப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, விடா V1 பிளஸ் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் கிளாஸ் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. அதேபோன்று, ப்ரோ வேரியண்ட் - மேட் வைட், மேட் ஸ்போர்ட்ஸ் ரெட், கிளாஸ் பிளாக் மற்றும் மேட் அப்ரக்ஸ் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. 


 


 


Car loan Information:

Calculate Car Loan EMI