Hero Mavrick 440: ஹீரோ நிறுவனத்தின் புதிய மேவ்ரிக் 440 ரக மோட்டார் சைக்கிளானது, ஹார்லி டேவிட்சன் வாகனத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.


Hero Mavrick 440:


Harley-Davidson X440 ஐ அடிப்படையாகக் கொண்ட Mavrick 440 மாடலை, Hero MotoCorp நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் இந்திய சாலைகளில் சோதனை ஒட்டம் மேற்கொண்டபோது, பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. கடந்த வாரம் மேவ்ரிக் 440 மாடலுக்கான கிளிம்ப்ஸையும் ஹீரோ நிறுவனம் வெளியிட்டது.


இந்நிலையில், Mavrick 440 க்கான முன்பதிவுகள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிறுவனம் இந்தியாவில் மோட்டார் சைக்கிளின் விலையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து, பைக்கின் விநியோகம் ஏப்ரல் 2024 முதல் தொடங்க உள்ளது. இதன் விலை  2 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகமாகும்போது, இந்த மாடல் Royal Enfield Classic 350, Triumph Speed 400, யெஸ்டி மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும். 






Hero Mavrick 440 விவரங்கள்:


ஹீரோ மேவ்ரிக் 440 ஆனது முழு LED லைட்டிங் மற்றும் ப்ளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், செல்போன் அழைப்பு மற்றும் செய்தி விழிப்பூட்டல்களுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது. மற்ற அம்சங்களில் USB-C சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவையும் உள்ளன. பெட்ரோல் டேங்க், முன் ஃபோர்க்குகள் வரை நீட்டிக்கப்படும் கூர்மையான டேங்க் நீட்டிப்புகள், ஒற்றை துண்டு இருக்கை மற்றும் கணிசமான பிலியன் கிராப் ரெயில் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.


பிரேக்கிங் ஹார்டுவேர் முன் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. இது இரட்டை-சேனல் ஏபிஎஸ் அமைப்புடன் விற்பனைக்கு வருகிறது. டயமண்ட்-கட் அலாய் வீல்கள் மற்றும் ஹார்லி-டேவிட்சன் X440 என்ற மோட்டார்சைக்கிளிலிருந்து வேறுபட்ட எக்சாஸ்டர் அமைப்பையும் கொண்டுள்ளது. முன் மற்றும் பின் சக்கரங்கள் 17 இன்ச் அலாய் வீல்களாக இருப்பதோடு, பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சர்பர்ஸ் கொண்டுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:




Hero Maverick 440 ஆனது Harley-Davidson X440க்கு சக்தியளிக்கும் அதே 440cc, ஆயில்-கூல்டு இன்ஜினை பயன்படுத்துகிறது. சிங்கிள் சிலிண்டர் மோட்டார் 27 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் நிலையானதாக ஒரு உதவி மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றைப் பெறுகிறது. Base, Mid மற்றும் Top ஆகிய 3 வேரியண்ட்களில் இந்த மாடல் விற்பனைக்கு வருகிறது. ஆர்க்டிக் வெள்ளை, செலஸ்டியல் ப்ளூ, ஃபியர்லெஸ் ரெட், பாண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் ஆகிய 5 வண்ண ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.


Base எடிஷன் ஸ்போக் வீல்களுடன் வழங்கப்படுவதோடு, ஒற்றை ஆர்க்டிக் ஒயிட் பெயிண்ட் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். மிட் வேரியண்டில் அலாய் வீல்களில் கிடைப்பதோடு, செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஃபியர்லெஸ் ரெட் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். டாப்-ஸ்பெக் டிரிம் மிஷிண்ட் அல்லாய்ஸில்வழங்கப்படுவதோடு,  பாண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.


 




Car loan Information:

Calculate Car Loan EMI