2023 Karizma XMR 210: ஹீரோ நிறுவனம் கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மோட்டர்சைக்கிள் தொடர்பான டீசரை வெளிப்படுத்தி, வாடிக்கையாளர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 


ஹீரோ மோட்டோகார்ப்:


 இந்தியாவில் எண்ட்ரி  லெவல் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் செக்மெண்டில் உள்ள கடும் போட்டி காரணமாக, 2003ம் ஆண்டு முதல்முறையாக கரிஸ்மா அறிமுகபடுத்தப்பட்டபோது மிகச்சிறந்த செயல்பாட்டுடன் அதனை ஹீரோ நிறுவனம் வடிவமைத்து இருந்தது. இந்நிலையில் தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்த சில தினங்களில் மீண்டும் தனது புதிய  கரிஸ்மா மோட்டர்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பைக் வரும் 29ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஹீரோ நிறுவனம் அடுத்தடுத்த டீசர்களை வெளியிட்டு வாடிக்கையாளர்கள் இடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


வடிவமைப்பு:


புதிய கரிஸ்மா பைக் அதன் ஐகானிக் நிறமான மஞ்சள் நிறத்தில் விற்பனைக்கு வர உள்ளது.  வடிவமைப்பு விதத்தில் முன்னேற்றம் கண்டு XMR 210 நவீன தோற்றமுடைய முழு-எல்.ஈ.டி முகப்பு விளக்கை பெறுகிறது. டூயல்-டோன் கலர் தீம் மற்றும் இறக்கை வடிவ எல்இடி டிஆர்எல்கள் இடம்பெற்றுள்ளன. பாடிவொர்க்கில் கூர்மையான கோடுகள் மற்றும் மடிப்புகள் இடம்பெற்றுள்லன. முதல் வேரியண்ட் சிங்கிள் பீஸ் இருக்கையுடன் வந்த நிலையில், புதிய கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 ஸ்பிலிட் சீட் இருக்கை அமைப்பை கொண்டுள்ளது. ஹார்டுவேரைப் பொறுத்தவரை XMR 210 ஆனது முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, பிரேக்கிங் அமைப்பில் டூயல்-சேனல் ஏபிஎஸ் தரநிலையாக இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன.


அம்சங்கள்:


வாகனத்தில் இடம்பெற்றுள்ள கூடுதல் அம்சங்கள் தொடர்பாக எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இதில் முழு டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனிங் வழங்கப்பட உள்ளது. இதில், எரிபொருள் நிலை, இன்ஜின் வெப்பநிலை, சராசரி வேகம், எரிபொருள் திறன் வாசிப்பு மற்றும் வேகமானி மற்றும் டேகோமீட்டர் அளவீடுகள் உட்பட பல தகவல்களை வழங்கும் என கூறப்படுகிறது.


இன்ஜின் விவரங்கள்:


கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 புதிய 210சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த இன்ஜின் லிக்விட்-கூல்டு ஆகும்.  இது ஹீரோவிற்கு 25 Bhp மற்றும் 20Nm daarkஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.


விலை விவரங்கள்:


ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் விலை இந்திய சந்தையில் ரூ. 2 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது இந்திய ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் எண்ட்ரி லெண்ட செக்மண்டில் உள்ள பஜாஜ் பல்சர் RS 200 , Yamaha R15 மற்றும் Suzuki Gixxer SF 250 ஆகியவற்றுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI