உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் Harley-Davidson. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. Harley-Davidson பைக் வாங்குவதை பலரும் மிகப்பெரிய கெளரவமாக கருதுவார்கள். 

Continues below advertisement

Harley-Davidson X440:

அவர்களின் Harley-Davidson X440 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Harley-Davidson X440 பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. X440 Vivid - ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரத்து 517

2. X440 S  - ரூபாய் 3 லட்சத்து 12 ஆயிரத்து 902

2வது வேரியண்டில் ப்ளூடூத், ஜிபிஎஸ் வசதிகள் உள்ளது. முதல் வேரியண்ட் மஞ்சள், சிவப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணங்களில் உள்ளது. 2வது வேரியண்ட் ஆரஞ்சசு மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது.

எஞ்ஜின்:

இந்த Harley-Davidson X440 பைக்கில் 440 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது நெடுஞ்சாலையில் 37 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. போக்குவரத்து நெரிசலில் 25 முதல் 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 6 கியர்கள் உள்ளது. இந்த பைக்கின் எடை 190.5 கிலோ ஆகும். இதில் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 

இதன் இருக்கை உயரம் 805 மி.மீட்டர் ஆகும். 38 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1 கியர் கீழேவும் 5 கியர் மேலேவும் இயக்க வேண்டும். ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 473 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பிஎஸ் 6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் வசதி உள்ளது. 

சிறப்புகள்:

டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

KYB Upside-down Forks 43mm முன்பக்கம் சஸ்பென்சனும், பின்பக்கம் Twinshock Absorbers, 7 Step Preload adjustable சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 170 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகும். ரிசர்வ்ட் 2.7 லிட்டர் ஆகும். 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வாகன வாரண்டி அளிக்கப்படுகிறது. 3 இலவச சர்வீஸ் ஆகும். 

3.5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் ஆகும். 2 ட்ரிப்மீட்ரட்ஸ் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி, கியர் ஷிப்ட் லைட், லோ ப்யூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. சர்வீஸ் ரிமைண்டர் இண்டிகேட்டர் வசதி, ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி, ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. எல்இடி ப்ராஜெக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலே எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள் ப்ரேக்/ டெயில் விளக்கில் பொருத்தப்பட்டுள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்குகளிலே இந்த பைக்தான் விலை குறைவான பைக் ஆகும். 


Car loan Information:

Calculate Car Loan EMI