இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலானது. இதையடுத்து, வீட்டு உபயோக பொருட்கள் முதல் கார், இரு சக்கர வாகனங்கள் வரை அனைத்தின் விலையும் பெருமளவு குறைந்துள்ளது. அந்த வகையில் ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் விலை குறைந்துள்ள கார்கள், எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது? என்ற பட்டியலை கீழே காணலாம்.
1.Honda Amaze - ரூ.1.2 லட்சம்
2. Tata Altroz - ரூ.1.10 லட்சம்
3. Toyota Taisor - ரூ.1.11 லட்சம்
4. Kia Sonet - ரூ.1 லட்சம்
5. Kia Syros - ரூ. 1.86 லட்சம்
6. Skoda Kylaq - ரூ.1.11 லட்சம்
7. Nissan Magnite - ரூ.1 லட்சம்
8. Maruti Arena cars - ரூ.1 லட்சம்
9. Maruti Fronx - ரூ.1.12 லட்சம்
10. Mahindra XUV 3XO - ரூ.1.56 லட்சம்
11. Hyundai Venue - ரூ.1.23 லட்சம்
12. Hyundai Venue N-Line - ரூ.1.19 லட்சம்
மேலே கூறிய கார்கள் மத்திய அரசு வரையறுத்தப்படி 4 மீட்டர்களுக்கு கீழே உள்ளது. இதில் ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி ரக கார்கள் அனைத்தும் உள்ளது.
Honda Amaze:
ஹோண்டா நிறுவனத்தின் Amaze காரில் ஏராளமான வேரியண்ட்கள் உள்ளது. இதன் அடிப்படை வேரியண்டின் புதிய விலை ரூபாய் 7.40 லட்சம் ஆகும். இதன் அடிப்படை வேரியண்டில் இருந்து டாப் வேரியண்ட் வரை ரூபாய் 69 ஆயிரம் முதல் ரூ.1.2 ஆயிரம் வரை இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
Tata Altroz:
டாடா நிறுவனத்தின் சிறப்பான படைப்பாக Tata Altroz உள்ளது. பாதுகாப்பு அம்சத்தில் சிறந்து விளங்கும் டாடா ஆல்ட்ரோஸ் காரின் விலை ரூபாய் 1.10 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை இனிமேல் ரூபாய் 6.30 லட்சம் ஆகும்.
Toyota Taisor:
டொயோட்டோ நிறுவனத்தின் முன்னணி கார் Toyota Taisor ஆகும். இந்த காரின் விலையை ரூபாய் 1.11 லட்சம் வரை குறைத்துள்ளனர். இதன் புதிய விலை ரூபாய் 11.07 லட்சம் ஆகும்.
Kia Sonet:
முன்னணி கார் நிறுவனமா Kia நிறுவனத்தின் முக்கிய படைப்பு Kia Sonet ஆகும். இந்த காரின் புதிய அடிப்படை விலை ரூபாய் 7.69 லட்சம் ஆகும். இந்த காரை ரூபாய் 1 லட்சம் வரை குறைத்துள்ளனர்.
Kia Syros:
கியா நிறுவனத்தின் மற்றொரு காரான Kia Syros புதிய அடிப்படை விலை ரூபாய் 8.67 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 1.86 லட்சம் வரை விலையை குறைத்துள்ளனர்.
Skoda Kylaq:
ஸ்கோடா நிறுவனத்தின் Skoda Kylaq காரின் புதிய விலை ரூபாய் 7.54 லட்சம். இதன் விலையை ரூபாய் 1.11 லட்சம் வரை குறைத்துள்ளனர்.
Nissan Magnite:
நிஸான் நிறுவனத்தின் முக்கிய படைப்பான Nissan Magnite விலை ரூபாய் 1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 5.61 லட்சம் முதல் உள்ளது. டாப் வேரியண்ட் விலை ரூபாய் 9.64 லட்சம் ஆகும்.
Maruti Fronx:
மாருதி நிறுவனத்தின் Maruti Fronx காரின் புதிய அடிப்படை விலை ரூபாய் 6.85 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் ரூபாய் 11.98 லட்சம் ஆகும். இதன் விலை ரூபாய் 1.12 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Mahindra XUV 3XO:
மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு Mahindra XUV 3XO ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 7.99 லட்சம் ஆகும். இந்த கார் ரூபாய் 1.56 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
Hyundai Venue:
ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Venue காரின் டாப் வேரியண்ட் விலையை ரூபாய் 1.23 லட்சம் வரை குறைத்துள்ளனர். இந்த காரின் புதிய தொடக்க விலை ரூபாய் 7.26 லட்சம் ஆகும்.
Hyundai Venue N-Line:
ஹுண்டாய் வெனுயூ காரின் Hyundai Venue N-Line காரின் விலை ரூபாய் 1.19 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI