GST Price Cut: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜிஎஸ்டி திருத்தத்தால் அதிகபட்ச விலை தள்ளுபடி பெற்ற, டாப் ப்ராண்ட்களின் கார் மாடல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement


தள்ளுபடி பெற்ற கார்கள்:


மத்திய அரசின் ஜிஎஸ்டி திருத்தம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பிரிவுகளை போன்று, ஆட்டோமொபைல் துறையும் பெரும் பலனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், எண்ட்ரி லெவல் செக்மெண்டில் வரும் ஹேட்ச்பேக் மற்றும் செடான்கள் மீதான வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைந்துள்ளது. கூடுதலாக, செஸ் வரியும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள், தங்களது எந்த மாடலுக்கு அதிகபட்ச விலைக் குறைப்பை அறிவித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.



1. மாருதி சுசூகி


நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி 46 ஆயிரத்து 400 ரூபாயில் தொடங்கி, அதிகபட்சமாக ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 600 ரூபாய் வரையில் விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த அதிகப்பட்ச பணப்பலனானது, எஸ்-ப்ரெஸ்ஸோ மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4.26 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) இருந்த இந்த காரின் தொடக்க விலை, தற்போது ரூ.3.49 லட்சமாக குறைந்துள்ளது. எண்ட்ரி லெவல் காரை வாங்க விரும்புபவர்களுக்கும், நகர்ப்புற பயன்பாட்டிற்கும் எஸ் - ப்ரெஸ்ஸோ சிறந்த தேர்வாக இருக்கும். 


2. மஹிந்த்ரா & மஹிந்த்ரா


இந்திய சந்தையில் எஸ்யுவிக்கள் மூலம் பிரபலமான ப்ராண்டாக மாறியுள்ள மஹிந்த்ரா நிறுவனம், தனது கார்களுக்கு ரூ.1.01 லட்சத்தில் தொடங்கி ரூ.1.56 லட்சம் வரை விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இதில் அதிகபட்ச பணப்பலானானது XUV 3XO கார் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் சலுகையாக 90 ஆயிரம் ரூபாயை அறிவித்திருப்பதால, ஒட்டுமொத்த இந்த கார் மாடலின் மீது பயனர்கள் ரூ.2.46 லட்சத்தை சேமிக்கலாம். அதேநேரம், பொலேரோ/நியோ கார் மாடல்களுக்கு ரூ.1.27 லட்சம் விலைக்குறைப்பு மற்றும் ரூ.1.29 லட்சம் கூடுதல் சலுகைகள் என, ஒட்டுமொத்தமாக ரூ.2.56 லட்சம் வரையிலான பணத்தள்ளுபடியை மஹிந்த்ரா நிறுவனம் அறிவித்துள்ளது.


3. டாடா மோட்டார்ஸ்


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களின் மீது 67 ஆயிரம் ரூபாயில் தொடங்கி ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. அதிகபட்ச பலனை பெற்றுள்ள நெக்ஸான் கார் மாடலின் தற்போதைய விலை ரூ.7.31 லட்சமாக (எக்ஸ் - ஷோரூம்) குறைந்துள்ளது. இதுபோக, கூடுதல் சலுகையாக ரூ.45 ஆயிரத்தை டாடா நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதால், நெக்ஸான் கார் வாங்குபவர்கள் தற்போது 2 லட்ச ரூபாயை சேமிக்க முடியும். இதுபோக விலைக்குறைப்பு மற்றும் கூடுதல் தள்ளுபடிகளின் மூலம் சஃபாரி காரின் மீது ரூ.1.98 லட்சமும், ஹாரியர் கார் மீது ரூ.1.94 லட்சமும் பயனர்கள் சேமிக்கலம.


4. ஹுண்டாய் மோட்டார்ஸ்


இந்தியாவின் நம்பகமான கார் ப்ரண்ட்களில் ஒன்றாக திகழும் ஹுண்டாய் நிறுவனம், தனது மாடல்கள் மீது ரூ.60,640 தொடங்கி அதிகபட்சமாக 2 லட்சத்து 40 ஆயிரத்து 303 ரூபாய் வரையிலான விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதில் அதிகபட்ச பணப்பலனானது டக்சன் கார் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரானது பாரத் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தனது குறிப்பிட்ட சில கார் மாடல்களுக்கு மட்டும் செப்டம்பர் 25ம் தேதி வரை கூடுதல் சலுகைகளையும் ஹுண்டாய் அறிவித்துள்ளது.


5. டொயோட்டா 


டொயோட்டா நிறுவனம் தனத் கார் மாடல்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.48 ஆயிரத்து 700 ரூபாயை, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் விளைவாக குறைத்துள்ளது. அதிகபட்சமாக ஃபார்ட்சூனர் கார் மாடலுக்கு ரூ.3.49 லட்சம் பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் புதிய தொடக்க விலை ரூ.33.65 லட்சமாக (எக்ஸ் - ஷோரூம்) மாறியுள்ளது. இதுபோக லெஜெண்டர் கார் மாடலின் விலையும் ரூ.3.34 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.


6. கியா


ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாக வெகுஜன கார் மாடல்களின் மீது அதிகப்பட்ச விலைக் குறைப்பை அறிவித்த நிறுவனங்களில் ஒன்றாக கியா உள்ளது. காரணம் தனது காரென்ஸ் கார் மாடல் மீது குறைந்தபட்சமாக 48 ஆயிரத்து 513 ரூபாயை குறைந்த நிறுவனம், கார்னிவெல் கார் மாடல் மீது 4 லட்சத்து 48 ஆயிரத்து 542 ரூபாய் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. 


இதுபோக ஹோண்டா, ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் உள்ளிட்ட பல நிறுவனங்களும், தங்களது கார் மாடல்கள் மீது விலைக்குறைப்பை அறிவித்துள்ளன. இருப்பினும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள், துறையில் முதன்மையாக இருப்பதால் அவற்றின் விவரங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI