பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எறிவது அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்க்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எறியும் சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்த காரணத்தால் மத்திய அரசு முக்கியமான முடிவுகளையும், கட்டுப்பாடுகளையும் அவசரமாக விதிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகள் மட்டும் அல்லாமல் கார், பஸ், போன்றவற்றை அதிகளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய மாநில அரசுகளும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் திட்டமிட்டு வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எறிந்தது குறித்து முழுமையாக ஆய்வு செய்து முடிவுகள் வரும் வரையில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய வேண்டாம் என எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கு அறிவிப்பு வெளியானதாக நேற்று செய்திகள் வந்தன.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விபத்துக்கள் குறித்து மத்திய சாலைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் உடன் நடத்திய கூட்டத்தில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்படி வந்த செய்திகள் உண்மையல்ல என்று அறிவித்துள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் வரை புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக வெளியான செய்திகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மறுத்துள்ளது. அனைத்து மின்சார வாகன உற்பத்தியாளர்களும், ஏதாவது வாகனம் தீப்பிடித்து எரிந்திருந்தால் அதோடு சேர்த்து தயாரிக்கப்பட்ட முழுத் தொகுதி வாகனங்களையும் தானாக முன்வந்து திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூட அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது. இப்போது, அமைச்சகம் அத்தகைய அறிவுறுத்தலை வழங்கவில்லை என்று சமூக ஊடகங்களில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபத்திய அறிக்கைகளின்படி, மின்சார வாகன உற்பத்தியாளர்கள் "தீ விபத்துக்கான காரணம் மற்றும் அவற்றைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் வரை புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம்" என்று வாய்மொழியாகக் கூறப்பட்டிருந்தது.
அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் கூற்றுபடி, "மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் இல்லாத உற்பத்தியாளர்களும் தங்கள் விற்கப்பட்ட வாகனங்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்குமாறு எச்சரித்துள்ளனர். சாலைகள் அமைச்சகம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களிடம் பாதுகாப்பு கட்டணம் வசூலிப்பது குறித்து நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது. மற்றும் தீ விபத்துகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் விவாதிக்க வலியுறுத்தி உள்ளது" என்று தெரிகிறது.
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி உத்தரவின் படி ஓலா, ஒகினாவா, ப்யூர் EV ஆகிய 3 நிறுவனங்கள் மட்டும் சுமார் 7000 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் வாகனங்களில் கோளாறு இருந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் படி மத்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வாகனங்களை மொத்தமாகத் திரும்பப் பெறவும் உத்தரவிட முடியும்.
Car loan Information:
Calculate Car Loan EMI