இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையில் தனி இடம் பிடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், Gemopai நிறுவனமும் தனது படைப்புகளை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. 

Continues below advertisement

Gemopai Ryder SuperMax:

இவர்களின் Gemopai Ryder SuperMax இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 86 ஆயிரத்து 327 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். அதிகபட்சமாக 60 கி.மீட்டர் வேகத்தில் இந்த இ ஸ்கூட்டரில் செல்லலாம். இதன் எடை 80 கிலோ ஆகும். யுஎஸ்பி சார்ஜிங் வசதி இதில் உள்ளது. 

Continues below advertisement

பேட்டரி ஆற்றல்:

மஞ்சள், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 6 வண்ணங்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. 40 கிலோமீட்டர் வேகத்தை இது 3.2 நொடிகளில் எட்டிவிடும். 3 மோட்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. இதில் 1.8 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி போர்ட்டபிள் பேட்டரி ஆகும்.  

ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி இதில் உள்ளது. 2 மணி நேரத்தில் சார்ஜிங் செய்ய முடியும். லித்தியம் அயர்ன் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் டைப் ஆகும். இ ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக் உள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

முன்பக்கமும், பின்பக்கமும் 10 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஹைட்ராலிக் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 

கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். 150 கிலோ வரை எடை தாங்கும் திறன் கொண்டது. பேட்டரி வாரண்டி மற்றும் மோட்டார் வாரண்டி 3 வருடம் ஆகும். இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகும். ப்ளூடூத் மொபைல் போன் வசதி ஆகும். டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் ஆகும். ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 

சிறப்புகள்:

ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி இதில் உள்ளது. கால்/ எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி இதில் உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது.

பேட்டரி ஸ்டேட்டஸ் பார்க்கும் ஏற்பாடுகள் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் இந்த இ ஸ்கூட்டர் இருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

எடை குறைவாக இருப்பதால் பெண்கள், முதியவர்களும் ஓட்டுவதற்கு இந்த இ ஸ்கூட்டர் இலகுவாக உள்ளது. Gemopai நிறுவனத்தின் 3 இ ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. Gemopai Ryder, Gemopai Astrid Lite மற்றும் Gemopai Ryder SuperMax மாடல் இ ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI