Ford EV TN: தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க, ஃபோர்ட் நிறுவனம் அண்மையில் விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் EV உற்பத்தி செய்ய ஃபோர்ட் திட்டம்:
புளூம்பெர்க்கின் அறிக்கையின்படி, ஃபோர்டு மோட்டார் நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள தனது ஆலையில் மின்சார வாகனங்களை (EV) உற்பத்தி செய்வதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாகன உற்பத்தியாளர் உள்ளூர் உற்பத்தியை நிறுத்ட்திய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் சர்வதேச சந்தையில், பல முன்னணி மின்சார கார்கள் மற்றும் டிரக்குகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டிஆர்பி ராஜா சொல்வது என்ன?
ஃபோர்ட் நிறுவனம் மீண்டும் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக, தமிழக தொழில்வள அமைச்சர் டிஆர்பி ராஜா ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்லார். அதில், “ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் என்ன மாதிரியான வாகனங்களை உற்பதை செய்யும் என்பதை இன்னும் இறுதி செய்யவில்லை. ஆனால் மின்சார வாகன உற்பத்தி கள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். தற்போதுள்ள வாகன உற்பத்தியாளர்களின் ட்ரெண்டை தொடர்வதானால், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வரும் முதலீட்டாளர்கள் தங்கள் மின்சார வாகன உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதை ஃபோர்டும் பின்பற்றலாம்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை:
அண்மையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஃபோர்ட் நிறுவன அதிகாரிகள் குழு சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதுதொடர்பாக பேசிய, ஃபோர்டின் இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் குழுமத் தலைவர் கே ஹார்ட், இந்தியாவின் மீதான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார், மேலும், “தமிழ்நாட்டின் உற்பத்தித் திறன்கள் ஃபோர்டு உலகளாவிய சந்தைகளை இலக்காகக் கொள்ள உதவும்” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தி:
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் வியட்நாமின் வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்கள், தமிழ்நாட்டில் மின்சார வாகன உற்பத்தி வசதிகளை நிறுவ அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இந்த சூழலில் தான் Ford நிறுவனமும் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்ட் தனது சென்னை ஆலையை ஏற்றுமதிக்காகப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை தமிழ்நாடு மாநில அரசாங்கத்திடம் கடந்த மாதம் சமர்பித்தது குறிப்பிடத்தக்கது.
EV மீது கவனம் செலுத்தும் மத்திய அரசு
EV உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவின் பரந்த முயற்சியுடன் இந்த நடவடிக்கை இணைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டில் $500 மில்லியன் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்ய உறுதியளிக்கும் வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களுக்கான இறக்குமதி வரிகளை மத்திய அரசு குறைத்தது. இந்த சூழலில் தமிழ்நாடு EV உற்பத்திக்கான மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது, தொழில்துறையை மேம்படுத்துவதற்கான நாட்டின் மூலோபாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஃபோர்ட் தற்போது தமிழ்நாட்டில் அதன் உலகளாவிய வணிக நடவடிக்கைகளில் 12,000 பணியாளர்களைப் பயன்படுத்துகிறது. சமீபத்திய அறிக்கையின்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் 3,000 வேலைகளைச் சேர்க்க நிறுவனம் எதிர்பார்க்கிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI