வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அரசாங்கம் அளித்துவரும் மானியம் குறைக்கப்பட்டதால் இந்த விலை உயர்வு அவசியமாகி உள்ளது.
அரசாங்கத்தில் ஃபேம் (FAME) என்றொரு திட்டம் இருக்கிறது. அதாவது எலக்ட்ரிக் வாகனங்களை வேகமாக உற்பத்தி செய்யும் பொருட்டு அதன் உற்பத்தியாளர்களுக்கு இதன் கீழ் மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டம் இப்போது இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஃபேம் 2 திட்டத்தின்படி மானியமானது ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச மானியம் என்பது, தொழிற்சாலை விலையிலிருந்து 15 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இது 40 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் மானியம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பான முடிவு இம்மாத ஆரம்பத்திலேயே அரசாங்கம் 24 எலக்ட்ரிக் இருச்சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஆலோசனையில் எடுக்கப்பட்டது.
ஃபேம் 2 திட்டமானது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோருக்கு ஊக்கத் தொகை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் டூ வீலர்களை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால், இந்த ஃபேம் 2 திட்டமானது முழுக்க முழுக்க மக்களை ஊக்குவிக்கும். வர்த்தக போக்குவரத்துக்கான 3 சக்கர இ வாகனங்களை வாங்குவதற்கும் ஊக்குவிக்கும். அதேபோல் எலக்ட்ரிக் 4 சக்கர வாகனங்கள் குறிப்பாக பேருந்துகளை வாங்க
மின்சார வாகன உற்பத்தியாளர்கள் சங்கம், அரசாங்கத்தின் மானியக் குறைப்பு முடிவுக்கு வெகுவாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறாக மானியத்தை அதிரடியாக திடீரென குறைப்பது எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும் என்று தெரிவித்தனர்.
எஸ்எம்இவி இயக்குநர் ஜெனரல் ஷொஹிந்தர் கில் கடந்த வாரம் இது குறித்து கூறுகையில், கள நிலவரம் என்பது இந்திய சந்தைகள் இன்னும் இ ஸ்கூட்டர் விலையை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அப்படியிருக்க மானியத்தை குறைப்பது இந்த வாகனத்தின் மீதான மக்கள் ஈர்ப்பை இன்னுமே குறைக்கும்.
பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விலை ரூ.1 லட்சமாக இருக்கும் சூழலில் இ ஸ்கூட்டரை ரூ 1.5 லட்சத்துக்கு யார் வாங்குவார்கள்.
இருப்பினும் எலக்ட்ரிக் உபகரணங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஃபேம் 2 திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.
ஃபேம் 2 திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டம் மார்ச் 31 2024 வரை செயல்படும். ஏற்கென்வே இது 2019 ஏப்ரல் 1ல் அமலாக்கப்பட்ட நிலையில் 4 வது ஆண்டாக 2024க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 2024 மார்ச் 31க்குப் பின்னரும் இந்த மானியத்தை நீட்டிக்க அரசாங்க எவ்வித திட்டமிடலும் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI