பெட்ரோல் விலை உயர்வால் தற்போது பலரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், பலருக்கும் இருக்கும் ஒரே ஒரு கவலை இதன் ரேஞ்ச் (மைலேஜ்) குறித்துதான். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், நிறுவனங்கள் கூறும் அதே ரேஞ்ச் சாலைகளில் ஓட்டும்போது கிடைப்பதில்லை என்ற பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிங்கிள் சார்ஜில் அதிக ரேஞ்ச் பெற, இந்த எளிய வழிகளைப் பின்பற்றினாலே போதும்.

Continues below advertisement

சரியானடயர்காற்றழுத்தம் (Tyre Pressure)

எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டயர்களில் சரியான அளவு காற்றழுத்தம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். டயரில் காற்று குறைவாக இருந்தால், சாலையில் உராய்வு அதிகரித்து மோட்டாரில் கூடுதல் பளு ஏற்படும். இதனால் பேட்டரி சீக்கிரமாகவே காலியாகிவிடும். எனவே, அவ்வப்போது டயர் காற்றழுத்தத்தை பரிசோதித்து, சரியான அளவில் பராமரிப்பது, அதிக ரேஞ்ச் கிடைக்க உதவும்.

அதிகஎடைகூடாது (Avoid Overloading)

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அளவுக்கு அதிகமான எடையை ஏற்றிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஸ்கூட்டரில் அதிக எடை ஏற்றப்படும்போது, அதை இழுத்துச் செல்ல மோட்டாருக்கு அதிக சக்தி தேவைப்படும். இது பேட்டரியை விரைவாக உறிஞ்சி, ரேஞ்சை கணிசமாகக் குறைத்துவிடும்.

Continues below advertisement

சீரானவேகம்மற்றும்எக்கோமோட் (Consistent Speed & Eco Mode)

ஸ்கூட்டரை ஓட்டும்போது திடீரென ஆக்சிலரேட்டரை முறுக்குவது மற்றும் அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்போதும் சீரான வேகத்தில் ஓட்ட வேண்டும். மேலும், பெரும்பாலான இ-ஸ்கூட்டர்களில் எக்கோ மோட் வசதி இருக்கும். இந்த மோடில் வாகனத்தை ஓட்டினால், பேட்டரி அதிக அளவில் மிச்சமாகி சிறப்பான ரேஞ்ச் கிடைக்கும். டாப் ஸ்பீடில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

சரியானபேட்டரிபராமரிப்பு (Battery Care)

பேட்டரி முழுமையாக 0% வரை காலியாகும் வரை காத்திருக்க வேண்டாம். பேட்டரி அளவு 20% ஆக இருக்கும்போதே சார்ஜ் போட்டு விடுவது பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கும். அதேபோல, 100% முழுமையாக சார்ஜ் ஆன பின்பும், நீண்ட நேரம் பிளக்கில் மாட்டி வைப்பதையும் தவிர்க்க வேண்டும். பேட்டரி சூடாவதைத் தடுக்க, சுட்டெரிக்கும் வெயிலில் ஸ்கூட்டரை நிறுத்துவதை தவிர்த்து நிழலான இடங்களில் பார்க் செய்யவும்.

தொடர்பராமரிப்பு (Regular Maintenance)

பெட்ரோல் வாகனங்களைப் போலவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் முறையான சர்வீஸ் தேவை. குறிப்பாக பிரேக்குகள் மிகவும் இறுக்கமாக சக்கரத்தை அழுத்திப் பிடிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஸ்கூட்டரின் பாகங்கள் சீராக இயங்கினால் மட்டுமே மோட்டாருக்கு சிரமம் இருக்காது, இதன் மூலம் ரேஞ்சும் அதிகரிக்கும்.

இந்த எளிய குறிப்புகளை உங்கள் தினசரி பயணத்தில் தொடர்ந்து பின்பற்றி வந்தால், சிங்கிள் சார்ஜில் உங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்த முடியும்.


Car loan Information:

Calculate Car Loan EMI