ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, சாகச ஆர்வலர்களுக்காக புதிய NX500 மாடலை ஈ-கிளட்ச் வேரியண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 7.44 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், ரைடர்கள் கிளட்ச் மற்றும் லிவரைப் பயன்படுத்தாமல் மிகவும் மென்மையாக கியர்களை மாற்றலாம். பைக்கின் வடிவமைப்பு அல்லது பிற இயந்திர பாகங்களில் நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரைடிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை சேர்த்துள்ளது.
இந்த புதிய ஈ-கிளட்ச் அமைப்பு, இரண்டு எலக்ட்ரானிக் ஆக்சுவேட்டர்களின் உதவியுடன் கியர்களை மாற்றும் போது கிளட்ச் தானாகவே செயல்படும். பைக் முழுமையாக நின்றாலோ அல்லது மீண்டும் நகர ஆரம்பித்தாலோ கூட இந்த அமைப்பு சரியாக வேலை செய்யும். ஒருவேளை ரைடர் பழைய முறையில் பைக்கை ஓட்ட விரும்பினால், மேனுவல் கிளட்ச் லிவர் மற்றும் கியர் பெடலைப் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இந்த கூடுதல் தொழில்நுட்பத்தின் காரணமாக பைக்கின் எடை 3 கிலோ அதிகரித்து தற்போது 199 கிலோவாக உள்ளது. ஹோண்டா ஏற்கனவே தனது CB650R மாடல்களில் இந்த அம்சத்தை வழங்கியுள்ளது, தற்போது அந்த பைக்குகள் ஸ்டாக்கில் இல்லை.
சக்திவாய்ந்த எஞ்ஜின்
இப்போது என்ஜின் சக்தியைப் பொறுத்தவரை, இதில் 471cc ட்வின்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு என்ஜின் உள்ளது. இது 8,500 rpm இல் 47 குதிரை சக்தியையும், 6,500 rpm இல் 43 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இதில் ஆறு-ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. நீண்ட பயணங்களில் வசதிக்காக முன் பக்கத்தில் அப்-சைடு டவுன் (USD) ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளன. சாலைகளில் பிடிப்பதற்காக முன் 19-இன்ச் மற்றும் பின்புறம் 17-இன்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரட்டை சேனல் ABS..
பாதுகாப்புக்காக இதில் இரட்டை சேனல் ABS உள்ளது. முன் பக்கத்தில் 296 மிமீ இரட்டை டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக் அமைப்பு உள்ளது. ரைடருக்கு தேவையான தகவலுக்காக 5-இன்ச் TFT திரை இந்த பைக்கில் உள்ளது. இதில் டிராக்ஷன் கன்ட்ரோல் அம்சம் இருந்தாலும், ரைடிங் மோட்ஸ் போன்ற ஆடம்பர அம்சங்கள் இல்லை. இன்னும் கேபிள் ஆபரேட்டட் த்ரோட்டில் சிஸ்டத்தை நிறுவனம் பயன்படுத்துகிறது. நகர போக்குவரத்தில் அடிக்கடி கிளட்ச் அழுத்த முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும், நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கும் இந்த ஈ-கிளட்ச் பதிப்பு ஒரு வரப்பிரசாதம் போன்றது. ஹோண்டாவிடமிருந்து வந்த இந்த கிரேஸி அப்டேட், அட்வென்ச்சர் பைக் பிரிவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இந்த பைக் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும் என்று சொல்வதில் மிகையாகாது.
Car loan Information:
Calculate Car Loan EMI