Car Sale In 2023: அடிதூள்! இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2023ல் வாகன விற்பனை அமோகம் - ஹுண்டாய் அபாரம்

Car Sale In 2023: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2023ல் விற்பனையில் அசத்திய, உற்பத்தி நிறுவனங்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Car Sale In 2023: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இதுவரை இல்லாத அளவிலான விற்பனயை, ஹுண்டாய் கார் நிறுவனம் கடந்த ஆண்டில் பதிவு செய்துள்ளது.

Continues below advertisement

2023ல் இந்தியாவில் கார் விற்பனை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, பல வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களும் பல்வேறு புதுமாடல் கார்கள் உள்ளிட்ட பல வாகனங்களை அறிமுகம் செய்தன. ஹேட்ச்பேக், செடான், எஸ்யுவி மட்டுமின்றி மின்சார வாகனங்களும் அறிமுகமாகின. அதோடு, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல வாகனங்களும் விற்பனக்கு கொண்டுவரப்பட்டன. அவ்வப்போது பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் வாகன உற்பத்தி ஆனது 2022ம் ஆண்டைக் காட்டிலும், 2023ல் விற்பனை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விற்பனை விவரங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

Hyundai Motor India:

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2023ம் ஆண்டில் உள்நாட்டு சந்தையில் ஆறு லட்சம் யூனிட்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஒரு ஆண்டில் அந்நிறுவனம் பதிவு செய்த அதிகபட்ச விற்பனை இதுவாகும். இந்நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 6,02,111 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் உள்நாட்டில் 42,750 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் 1,63,675 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2022ம் ஆண்டை விட 10% அதிகமாகும்.

Maruti Suzuki:

கடந்த 2022ம் ஆண்டில் மொத்தமாக 1.39 லட்சம் யூனிட்களை விற்பனை செய்த மாருதி சுசுகி நிறுவனம், 2023ம் ஆண்டில் 1.37 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 1.3 சதவிகிதம் அதிகமாகும். அதேநேரம், 2022ல் 21 ஆயிரத்து 796 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2023ல் 26 ஆயிரத்து 884 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

Mahindra and Mahindra:

​​மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம்  டிசம்பர் மாதத்தில் 60,188 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மொத்த டிராக்டர் விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 23,243 யூனிட்களாக இருந்ததில் இருந்து, நடப்பாண்டில் 18% குறைந்து 19,138 ஆக பதிவாகியுள்ளது. 

Bajaj Auto:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டிசம்பர் மாதத்தில் மொத்த விற்பனையாக 3.26 லட்சமாக அறிவித்துள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது விற்பனை 16% அதிகரித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் 28% உயர்வுடன் 1.91 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளன.  ஏற்றுமதி 2% அதிகரித்து 1.35 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இருசக்கர வாகனப் பிரிவு விற்பனை 15% வளர்ச்சியடைந்து 2.83 லட்சம் யூனிட்களை எட்டியது. அதே நேரத்தில் 3-சக்கர வாகனங்கள் விற்பனை 27% உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டில் 34,462 யூனிட்களுடன் விற்பனையான நிலையில் நடப்பாண்டில் மொத்தம் 43,805 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

Escorts Kubota:

எஸ்கார்ட்ஸ் குபோடா 2022ம் ஆண்டில் 5,572 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், நடப்பாண்டில் மொத்தமாக 4,536 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola