கடந்த அக்டோபர் மாதத்தில் எலெக்ட்ரிக் காரின் விற்பனையானது அதிகரித்துள்ளது. இந்நிலையில்,எவ்வளவு எலக்ட்ரிக் கார் விற்பனையாகி உள்ளது, எந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் விற்பனை அதிகமாக விற்பனையாகி உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
அக்டோபர் மாத விற்பனை:
இந்தியா முழுவதும், கடந்த அக்டோபர் மாதத்தில் , எலக்ட்ரிக் கார் விற்பனை குறித்த தகவலை ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் (FADA) வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ அக்டோபர் மாதத்தில் 10, 609 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்டதைவிட 39.12 சதவிகிதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா- 6,152 கார்கள் விற்பனை:
விற்பனை செய்யப்பட்ட கார்களில் , நிறுவனங்களை ஒப்பிடுகையில், முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனத்திலிருந்து 6,152 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக, டியாகோ, பஞ்ச், நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளன.
இரண்டாவது இடத்தில் எம்.ஜி மோட்டார்ஸ் உள்ளது.இந்த நிறுவனத்திலிருந்து, 2, 530 கார்கள் விற்பனையாகி உள்ளன. குறிப்பாக, கோமெட், இசட் எஸ் இவி மற்றும் விண்ட்ஸர் இ.வி ஆகியவை விற்பனையில் முன்னணியில் உள்ளன.
மூன்றாவது இடத்தில் மகிந்திரா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து, 907 எஸ்.யூ.வி கார்கள் விற்பனையாகி உள்ளன. இது , கடந்த ஆண்டு 277 கார்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நான்காவது இடத்தில் சீன நிறுவனமான BYD உள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து, 363 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த நிறுவனத்தின் கார்கள் , கடந்த ஆண்டு 144 கார்கள் விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதர கார் நிறுவனங்களை பொறுத்தமட்டில் PCA நிறுவனம் 254 கார்களையும், மெர்சிடஸ் பென்ஸ் 146 கார்களையும், பி.எம்.டபிள்யூ 140 கார்களையும், வால்வோ 15 கார்களையும் கியா 35 கார்களையும் , ஆடி நிறுவனம் 4 கார்களையும் விற்பனை செய்துள்ளன.
அதிகரிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் பயன்பாடு:
டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய எரிபொருட்களின் பயன்பாட்டால் காற்று மாசடைந்து வருகிறது. அதை குறைக்கும் நோக்கில், உலகம் முழுவதும் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையானது, அதிகரித்து கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. விலை சற்று அதிகமாக இருந்தாலும், மக்கள் எலெக்ட்ரிக் கார்களின் பக்கம செல்வதையும் பார்க்க முடிகிறது. பயண தொலைவு, சார்ஜிங் செய்யப்படும் நேரம் உள்ளிட்டவை பிரச்னைகளாக பார்க்கப்பட்டாலும், குறைந்த தொலைவு பயணமான அலுவலகம் செல்லுதல் , ஷாப்பிங் செல்லுதல் உள்ளிட்டவைகளுக்கு எலக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்றே சொல்லலாம்.
மேலும் , பல தொழில்நுட்ப அப்டேட்டுகளுடன் எலக்ட்ரிக் கார்களின் வருகையானது இருப்பதால், வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI