ஃபியட் என்றாலே நம்மூர்‌ மக்களிடம் ஒரு‌ ஒவ்வாமை இருக்கும். பெய்லியர்‌ மாடல், பராமரிப்பு அதிகம், சர்வீஸ் பார்ட்ஸ் கிடைக்காது என‌பல விமர்சனங்கள். நீங்க ஃபியட் வாங்கப்போறேன்‌ என சொன்னாலே பலர்‌ இந்தப் புகார்களை அடுக்குவார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் ஃபியட் ‌கார்களை வாங்கியிருக்க மாட்டார்கள். எந்த அடிப்படையில் இதை சொல்கிறார்கள் என்றால் எனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள், அங்கே அப்படி ‌இங்கே இப்படி என் பதில் வரும். அதை‌ விட்டுவிடலாம் ஆனால் அந்த கம்பெனி‌யைப் பற்றி‌ தெரிஞ்சுக்கலாம் வாங்க.


1899 ஜூலை 11-இல் Giovanni Agnelli மற்றும் சில இன்வெஸ்ட் க்ளாஸ்  Fabbrica Italiana Automobili Torino ஆரம்பிக்கப்பட்டது. இதன் பொருள் "Italian automobile factory of Turin,” இதென்ன பிரமாதம் என்கிறீர்களா? இது ஹென்றி ஃபோர்ட் அவர் போர்ட் மோட்டார் கம்பெனி தொடங்குவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பாகவே துவங்கப்பட்ட கம்பெனி. 1900-ஆம் ஆண்டில் 35 வேலையாட்களுடன், முதல் கார்‌ தயாரிக்கப்பட்டது. 3.5 எச்பி இன்சினுடன் பின்னால் செல்லும்‌ கியர்‌ ( reverse gear) இல்லாமல் தயாரானது. 24 கார்கள் தயாரானது அந்த வருடம்.



FIAT


 


இதில் Giovanni Agnelli மற்றவர்களை விட தீவிரமாக வேலை செய்து 1902ல் ஃபியட்டின் நிர்வாக இயக்குநராக வருகிறார். 1903-ஆம் ஆண்டில் 135 கார்கள் ‌தயாராகின, அந்த வருடமே‌ கம்பெனியின்‌ முதல் ட்ரக்கும்‌ தயார், கம்பெனி ‌லாபம்‌ பார்க்கிறது. 1906-ஆம் ஆண்டில் 1149 கார்கள் பின்னர் 1908-ஆம் ஆண்டில் முதல் கார்‌ அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அந்த வருடமே முதல் விமான இஞ்சின் தயாராகிறது. இந்த காலகட்டத்தில் ஃபியட் ‌டாக்சிகள்‌ ஐரோப்பாவில் ‌பிரபலமாகின. அமெரிக்காவில் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது, கூடவே கமர்சியல் வெஹிகிள், கப்பல் இன்ஜின்கள், ரயில் இன்ஜின் டிராம் என எல்லாத்தையும் தயாரிக்க துவங்கினார்கள்.


15 வருடங்களில் 150 ஊழியர்களில் ஆரம்பித்து 4 ஆயிரம் ஊழியர்களாக வளர்ந்தது. இத்தாலியின் பிரதமராக  Giovanni Agnelli யின் நண்பர் Giovanni Giolitti இருந்ததும் அவரின் அரசின் தொழில்துறை கொள்கைகள் சாதகமாக இருந்ததும் ஒரு‌ காரணம். முதலாம் உலகப்போர் ஆரம்பித்தபோது இத்தாலி அதில் பங்கு பெற்றது. இத்தாலி அரசு ஃபியட்க்கு பல வகையான ஆர்டர்கள் கொடுத்தது, விமான இன்ஜின் ரயில் இன்ஜின், ராணுவத் தளவாடங்கள் என ஏகப்பட்ட தயாரிப்புகள். அந்த காலகட்டத்தில் இத்தாலியின் மிக முக்கியமான கம்பெனியாக மாறியது.



FIAT


 


1916-ஆம் ஆண்டில் மிகப் பெரிய கார் தயாரிப்பு ஆலையை உருவாக்கியது. முதன் முதலாக கார் கம்பெனியின் மொட்டைமாடியில் டெஸ்ட் ட்ராக்குடன் உருவானது. கீழிருந்து மேலாக  அசெம்பிள் செய்யப்படும் கார்கள் மொட்டைமாடியில் டெஸ்ட் அரங்கில் டெஸ்ட் செய்யப்பட்டு கீழே இறக்கப்படும். முதல் உலகப்போரின் இறுதியில் இத்தாலியின் மூன்றாவது மிகப்பெரிய கம்பெனி.


இந்த சமயத்தில் 85 சதவிகித இத்தாலி மார்க்கெட்டை ஃபியட் பிடித்திருந்தது. அதே காலகட்டத்தில் இத்தாலியில் கம்யூனிசம் மிக வேகமாக வளர்ந்தது. அங்கு ஒரு புரட்சி வெடிக்கும் நிலை உருவானது. அது ஃபியட்டையும் பாதித்தது. தொழிலாளர்கள் கம்பெனியை மூடும் நிலைமைக்குக் கொண்டு வந்தனர். இதே காலகட்டத்தில் இந்த நிலைமையைப்  பயன்படுத்தி முசோலினி ஆட்சியைப் பிடித்தார்.


அடுத்த பகுதியில், என்ன நடந்தது? ஃபியட் எப்படி மீண்டது? என்பதை பார்க்கலாம்..


Car loan Information:

Calculate Car Loan EMI