Diwali 2023 Car Offers: விழாக்கால சலுகையாக பல்வேறு முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் சலுகையை அறிவித்துள்ளன.


ஆட்டோமொபைல் சலுகை(Diwali Offers on Cars 2023):


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் ஏராளமான ஆட்டோமொபைல் நிறிவனங்கள் சலுகையை அறிவித்துள்ளன. பண தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் சிறப்பு பண்டிகை என பல்வேறு வடிவங்களில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. டாடா, ரெனால்ட், ஹுண்டாய், மாருதி மற்றும் சிட்ரோயன் ஆகிய நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட கார் மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன்படி,  இந்த பண்டிகைக் காலத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கும் ஹேட்ச்பேக்குகளின்(Hatchback Cars Discount) மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. குறைந்த சலுகையில் இருந்து அதிகபட்ச சலுகை வரையிலான விவரங்களை பயனாளர்கள் அறியலாம்.


Tata Altroz:


டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக்கும், சிஎன்ஜி வகையுமான ஆல்ட்ரோஸ் காருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. நாட்டில் இன்னும் டீசல் இன்ஜினுடன் கிடைக்கும் ஒரே ஹேட்ச்பேக் மாடல் இதுவாகும்.  


Tata Tiago:


டியாகோ ஹேட்ச்பேக் மாடல் காரை வாங்குபவர்களுக்கு ரூ.40,000 வரை சலுகை வழங்கப்படுகிறது.  இந்த சலுகை CNG வகைகளில் மட்டுமே கிடைக்கும். 


Renault Kwid:


அறிமுக காலத்தில் விற்பனையில் அசத்திய க்விட் கார் மாடல், தற்போது மிகவும் மந்தமான விற்பனையை சந்தித்து வருகிறது. பெரும்பாலான விற்பனை நிலையங்களில் சுமார் ரூ.50,000 தள்ளுபடியுடன் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இது 1.0-லிட்டர் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது, 


Hyundai i20 N Line:


பெரும்பாலான ஹூண்டாய் டீலர்கள் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் i20 N லைனின் விற்பனையாகாத யூனிட்கலை, தற்போது  கவர்ச்சிகரமான தள்ளுபடியுடன் சுமார் ரூ.55,000 வரையிலான சலுகையை வழங்குகின்றனர். இது தனித்துவமான வெளிப்புற ஸ்டைலிங்கைப் பெற்றுள்ளது.


Maruti Suzuki Baleno:


வலுவாக விற்பனையாகி வரும் பலேனோ, புதுப்பிக்கப்பட்ட i20 மாடலிடமிருந்து கடுமையான போட்டியைக் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,  விற்பனையை மேலும் அதிகரிக்கும் வகையில் ரூ.55,000 வரையிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் (Wagon R) கார் மாடலுக்கு 58 ஆயிரம் ரூபாயும், இக்னிஸ் (Ignis) கார் மாடல்களுக்கு 65 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆல்டோ கே10 (ALT0 K10) மாடலுக்கு 70 ஆயிரம் ரூபாய் வரையிலும், செலிரியோ (CELERIO) மாடலுக்கு 73 ஆயிரம் ரூபாய் வரையிலும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Citroen C3:


இந்தியாவில் விற்பனையாகி வரும் ஹேட்பேக் மாடல்களிலேயே அதிகபட்சமாக, சிட்ரோயன் கார் மாடலுக்கு மட்டும் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுப்படி மற்றும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI