Diwali 2023 Bike Offers: விழாக்கால சலுகையாக பல்வேறு முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது குறிப்பிட்ட இருசக்கர வாகன மாடல்களுக்கு சலுகையை அறிவித்துள்ளன.


ஆட்டோமொபைல் தீபாவளி சலுகை(Diwali Offers on bikes 2023):


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சலுகையை அறிவித்துள்ளன. பண தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள், கார்ப்பரேட் சலுகைகள், குறைந்த மாதத் தவணை மற்றும் சிறப்பு பண்டிகை என பல்வேறு வடிவங்களில் இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹீரோ மோட்டோகார்ப், ஓலா மற்றும் ஏதர் ஆகிய நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன்படி,  இந்த பண்டிகைக் காலத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிடைக்கும் பைக் மாடல்கள் (Two wheelers Offers) கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


JAWA YEZDI: 


ஜாவா நிறுவனம் தனது யெஸ்தி மோட்டார் சைக்கிள் மாடலுக்கான் மாதத் தவணையை, குறைந்தபட்சமாக ஆயிரத்து 888 ரூபாயாக குறைத்துள்ளது. இதற்கான வாரண்டி நான்கு வருடங்கள் அல்லது 50 ஆயிரம் கிலோ மீட்டர் வரையில் நிட்டிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரை டெலிவிரி செய்யப்படும் அனைத்து யெஸ்தி மாடல் பைக்குகளுக்கும் இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை 2 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகும்.


HERO SPLENDOR PLUS: 


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்ப்லெண்டர் பிளஸ் மாடலுக்கு, ”BUY NOW, PAY IN 2024” எனும் சிறப்பு திட்டம் விழாக்கால சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பாண்டில் இனி வாங்கும் ஸ்ப்லெண்டர் பிளஸ் மாடலுக்கு, அடுத்த ஆண்டில் தான் தவணை வசூலிப்பு (EMI) தொடங்கும். குறைந்தபட்சமாக வெறும் 6.99 சதவிகிதம் மட்டுமே வட்டியாக வசூலிக்கப்படுகிறது. மூவாயிரம் ரூபாய் வரை எக்ஸேஞ்ச் போனஸ் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Bajaj Chetak: 


பஜாஜ் நிறுவனத்தின் செடாக் ஸ்கூட்டரின் விலை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மட்டும் ஒரு லட்சத்து 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இதன் விலை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயாகும். விற்பனை நிலையங்களில் தற்போதுள்ள யூனிட்கள் தீரும் வரை மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


OLA Electric Scooters:


ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு அதிகபட்சமாக 24 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட் கார்ட்களுக்கு உடனடியாக ரூ.7,500 தள்ளுபடி வழங்குவதும் அடங்கும். பழைய பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு ஓலா நிறுவனம் 10 ஆயிரம் ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்குகிறது.


ATHER:


ஏதர் நிறுவனம் தனது பெரும்பாலான மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 450S, 450X 2.9kWh மற்றும் 450X 3.7kWh மாடல்களுக்கு ஐயாயிரம் ரூபாய் விலை தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


HERO VIDA V1:


ஹீரோ நிறுவனத்தின் விடா வி1 மின்சார ஸ்கூட்டரை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய தளங்கள் மூலம் வாங்கினால் ரூ.33 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் வரை இந்த சலுகை அமலில் இருக்கும். 


 


Car loan Information:

Calculate Car Loan EMI