பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கின் டிசைன், எலக்ட்ரானிக் வசதிகள் அனைத்தும் இந்தியாவின் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்குடன் ஒத்துப் போகின்றன.  இந்த இரண்டு பைக்குகளையும் பற்றி பார்க்கலாம்.


BMW G 310 RR - TVS Apache RR310 என்னென்ன வேறுபாடுகள் இருக்கின்றன?


இரண்டு பைக்குகளுக்கும் உள்ள வேறுபாடு பெரும்பாலும் கலர்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன. பிஎம்டபிள்யூ பைக் இரண்டு கலர்களில் வருகிறது. சாதாரண கருப்பு நிறத்தில் ஒரு மாடலும், பிஎம்டபிள்யூவின் வழக்கமான ஸ்போர்ட்ஸ் மாடலிலும் வருகின்றன. கருப்பு நிற வாகனத்தின் விலை சுமார் 2.85 லட்சமாகவும், வழக்கமான ஸ்போட்ஸ் மாடல் நிறம் 2.99 லட்சத்திற்கும் கிடைக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சி பைக்கானது பிஎம்டபிள்யூவை விட சுமார் 20 ஆயிரம் ரூபாய் குறைவாக 2.65 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.




பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் வாகனங்களுக்கான மிகப்பெரிய வித்தியாசம், இரண்டு வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் தான். பிஎம்டபிள்யூ பைக்கானது மிஷெலின் பைலட் ஸ்ட்ரீட் டயர்களையும், டிவிஎஸ் அப்பாச்சியானது மிஷெலின் ரோட் 5எஸ் டயருடனும் வருகிறது. பைலட் ஸ்ட்ரீட் டயர்களைவிட ரோட் ஆர்5 டயர்கள் மேம்பட்டவை என்று கூறப்படுகிறது. அப்பாச்சியில் ப்ளூடூத் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசதி பிஎம்டபிள்யூவில் கொடுக்கப்படவில்லை. அப்பாச்சியில் அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஸன் வருகிறது. ஆனால் பிஎம்டபிள்யூவில் ரியர் ப்ரிலோடை மட்டுமே அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்.


பிஎம்டபிள்யூ பைக்கில் 12 லிட்டர் எரிபொருளும், டிவிஎஸ் பைக்கில் 11 லிட்டர் எரிபொருளும் நிரப்பமுடியும். அதேபோல ஆண்ட்டி லாக்கிங் ப்ரேக்கிங் சிஸ்டம் பிஎம்டபிள்யூவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


சிம்பிளாக சொல்லவேண்டும் என்றால் BMW G 310 RR நாகப்பதனி என்றால், TVS Apache RR310 நாகபதனி. இவ்வளவு தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.




BMW G 310 RR - TVS Apache RR310 என்னென்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?


இந்த இரண்டு வாகனங்களிலும் சேசிஸ், எஞ்சின், ரைடிங் மோட் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கின்றன. 312.2 சிசி எஞ்சினில் 34 ஹெச்பி மற்றும் 27 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யக்கூடியது. இந்த வாகனமானது ஸ்லிப் அண்ட் அஸ்ஸிஸ்ட் க்ளட்ச்சுடன் 6 கியர்களுடன் வருகிறது. இந்த வாகனத்தின் எடை 174 கிலோவாக உள்ளது. இதில், ட்ராக், ஸ்போர்ட், அர்பன் மற்றும் மழை ஆகிய 4 ரைடிங் மோட்களும் உள்ளன. இதில் அர்பன் மற்றும் ரெயின் மோடில் 26 ஹெச்பி மற்றும் 25 என்எம் டார்க்கை மட்டுமே இந்த வாகனம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Car loan Information:

Calculate Car Loan EMI