டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை இனிமேல் இயக்கக்கூடாது என்று டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


டெல்லி அரசு தற்போது அறிவித்துள்ள உத்தரவு என்பது பல மில்லியன் கணக்கான மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். ஆம் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி, இனி மேல் டெல்லி மாநிலம் முழுவதும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களை இனி அதிக காலத்திற்கு இயக்க முடியாது என்று அறிவித்துள்ளது.





இந்நிலையில் அரசு அறிவித்துள்ள இந்த உத்தரவினை மதிக்காமல் இயக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து வாகன உரிமையாள்களும் தங்களுடைய வாகனங்களைச் சோதிக்கும் நடைமுறைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். வாகனங்களுக்கான ஸ்கிராப்பேஜ் பாலிசியின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வாகனங்களை ஆய்விற்கு உட்படுத்தி அதன் பிறகு வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டும் என்ற நடைமுறை உள்ளது. இதில் அனைத்து வாகனங்களுக்கும் இந்தத் தடை உத்தரவா? என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. குறிப்பாக இந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியின் படி, பயணிகள் வாகனங்கள் 20 ஆண்டு காலம் மற்றும் வணிக வாகனம் 15 ஆண்டுகள் ஆயுட்காலத்தினைக் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை இந்த வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது, ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் சான்றிதழ் கொடுக்கப்படும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதோடு, கட்டுப்பாடு இல்லாத வாகனங்களினால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பில்லை.





இந்நிலையில் இதுக்குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மேற்கோள்காட்டி மத்திய அரசு விரைவில் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளதாக தெரிவித்த நிலையில் தான், டெல்லி அரசு இந்த உத்தரவினைப்பிறப்பித்துள்ளது. எனவே டெல்லியில் பழைய டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் வைத்திருக்கும் நபர்கள் இதனை பல நாள்களுக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டெல்லியினைத் தொடர்ந்து இன்னும் இந்தியா முழுவதும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன உரிமையளாளர் பெரும் கலக்கத்தில் உள்ளனர். ஆனால் காலாவதியான வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதிக்கப்படுவதால் புதிய கார்கள் சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் என்று சந்தோஷத்தில் கார் வணிக நிறுவனங்கள் உள்ளனர். மேலும் மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியில், பழைய வாகனங்களை மாற்ற முன்வரும் நபர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்ற  நடைமுறையும் உள்ளது. எனவே இதன் காரணமாகவே மக்கள் அரசின் உத்தரவினை ஏற்று பழைய வாகனங்களை மாற்றுவார்கள் என்று தெரிகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI