Budget SUV Cars Under 8 Lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குடும்பத்தோடு பயணிக்க, மலிவு விலையில் கிடைக்கக் கூடிய சிறந்த எஸ்யுவி கார்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


பட்ஜெட் விலையில் எஸ்யுவி கார்கள்:


திட்டமிடப்பட்டுள்ள பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் தேவைகளை பூர்த்தி செய்யும், நம்பகமான SUV- யைக் கண்டுபிடிப்பது இன்றைய சந்தையில் மிகவும் சவாலானதாக உள்ளது. ஆனால், பல்வேறு ஆப்ஷன்கள் நமக்கு உள்ளன. அவற்றில் அதிக நிதி சுமையை ஏற்படுத்தாமல், அதேநேரம் பயனாளரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய அம்சங்கள் நிறைந்த சில வாகனங்களும் உள்ளன. அந்த வகையில் வெறும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டில் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய, குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான டாப் 5 எஸ்யுவி கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


1. ரெனால்ட் கைகர்:


விலை: ரூ. 5,99,990 (எக்ஸ்-ஷோரூம்)


உலகத் தரம் வாய்ந்த 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.0-லிட்டர் எனர்ஜி பெட்ரோல் இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. Renault Kygar ஆனது X-Tronic CVT மற்றும் 5-ஸ்பீடு EG-R AMT டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. கைகர் உயர் செயல்திறன் மற்றும் ஸ்போர்ட்டி டிரைவை வழங்குவதோடு, லிட்டருக்கு 20.62 கிமீ என்ற சிறந்த மைலேஜை வழங்குகிறது. ஓட்டுநர் மற்றும் முன்பக்க பயணிகளின் பாதுகாப்பிற்காக, ரெனால்ட் கைகர் நான்கு ஏர்பேக்குகள், ப்ரீ-டென்ஷனர்களுடன் கூடிய சீட்பெல்ட்கள் மற்றும் டிரைவருக்கான லோட்-லிமிட்டர் ஆகிய வசதிகளை கொண்டுள்ளன.


2. டாடா பஞ்ச்:


 விலை: ரூ. 6,12,900 (எக்ஸ்-ஷோரூம்)


சப்-காம்பாக்ட் SUV பிரிவில் நகர்ப்புறங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட, டாடாவின் புதிய மாடல் தான் ஸ்க்ராம்ப்ளர் பஞ்ச். ரூ.6.63 லட்சத்த தொடக்க விலையாக கொண்ட பஞ்ச், கட்டமைக்கப்பட்ட தரம் அல்லது உபகரணங்களில் சமரசம் செய்யாமல் மலிவு விலையில் SUV உற்சாகத்தை வழங்குகிறது. உட்புறம், கடினமான மேற்பரப்புகள் மற்றும் கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் தரத்தில் டாடாவின் புதிய கவனத்தை பிரதிபலிக்கிறது.  முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் ஆகியவை இந்த காரின் சிறந்த அம்சங்கள் ஆகும். இப்போது பெட்ரோல் வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. 1.2 லிட்டர் இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மூலம் 86 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த வாகனம் லிட்டருக்கு 18.97 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 


3. ஹூண்டாய் Xtr :


விலை: ரூ. 6,12,800 (எக்ஸ்-ஷோரூம்)


மற்றொரு மலிவு விலை எஸ்யுவி ஆன ஹூண்டாய் எக்ஸ்டரின் விலை ரூ.6.13 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.  1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஸ்மார்ட் ஆட்டோ AMT மற்றும் 1 CNG இன்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் என 3 பவர்டிரெயின் விருப்பங்களுடன் அது கிடைக்கிறது. புதிய எஸ்யூவி ஸ்மார்ட் எலக்ட்ரிக் சன்ரூஃப்,  டேஷ்கேம், 5.84 செமீ (2.31 இன்ச்) எல்சிடி டிஸ்ப்ளே, கனெக்டிவிட்டி அடிப்படையிலான ஸ்மார்ட்போன் ஆப்ஸ் மற்றும் பல ரெக்கார்டிங் முறைகளுடன் முன் மற்றும் பின்புற கேமராக்கள் கொண்ட இரட்டை கேமராக்கள் உள்ளன. Huundai Xter 26 பாதுகாப்பு அம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான நம்பிக்கையை வழங்குகிறது. 


4. மாருதி சுசுகி பிராங்க்ஸ்:


 விலை: ரூ. 7,51,000 (எக்ஸ்-ஷோரூம்)


ஃப்ராங்க்ஸ் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய, மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறை பவர்டிரெய்ன் மற்றும் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் வருகிறது. புதிய 1.0 லிட்டர் கே-சீரிஸ் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜின், ப்ரோக்ரஸிவ் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. பிரீமியம், பாதுகாப்பான, வசதியான மற்றும் தொந்தரவில்லாத ஓட்டுநர் அனுபவத்திற்கான பல தொழில்நுட்ப அம்சங்களை ஃப்ராங்க்ஸ் கொண்டுள்ளது. ஹெட் அப் டிஸ்ப்ளேயுடன் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், 360 வியூ கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 22.86 செ.மீ (9 இன்ச்) ஸ்மார்ட் ப்ளே ப்ரோ+ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு போன்ற பல சிறந்த அம்சங்கள் உள்ளன. 


5. கியா சோனெட்:


 விலை: ரூ. 7,99,000 (எக்ஸ்-ஷோரூம்)


Kia Sonet அதன் கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் பல சிறந்த-இன்-கிளாஸ் அம்சங்களுடன் இந்திய சந்தையில் அபரிவிதமான வரவேற்பை பெற்றுள்ளது. Sonet தனித்துவமான Kia பண்புகளை கூர்மையான வடிவமைப்பு மற்றும் விவேகமான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சிறந்த உபகரணங்களை கொண்டுள்ளது. இந்த கார் பல்வேறு பவர்டிரெய்ன் விருப்பங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.8.98 லட்சத்தில் தொடங்குகிறது. Sonet ஆனது எல்இடி ஹெட்லேம்ப்களால் சூழப்பட்ட சிக்னேச்சர் டைகர் மூக்கு கிரில்லைக் கொண்டுள்ளது, ஒருங்கிணைக்கப்பட்ட டிஆர்எல்கள் கவர்ச்சியை அதிகரிக்க, 18-இன்ச் கிரிஸ்டல் கட் அலாய்கள் மேலும் ஸ்டைலை சேர்க்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI