செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் :
அன்பார்ந்த வாசகர்களே, செவ்வாய் தற்போது மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பாக செவ்வாய் பற்றி சிறிது தெரிந்து கொள்வது நல்லது. செவ்வாய் ஒரு ஆக்ரோஷமான கிரகம் வாழ்க்கையில் . நாம் விடுகின்ற கட்டளையில் தொடங்கி . கட்டுகின்ற பெரிய பெரிய மாளிகை வரை செவ்வாயில் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது இப்படிப்பட்ட செவ்வாய் நிலத்திற்கு அதிபதி , ரத்தத்திற்கு அதிபதி , வீட்டுக்கு அதிபதி , அரசு அதிகாரத்திற்கு அதிபதி , இப்படி பல வகையான காரகத்துவங்களை செவ்வாய்க்கு நாம் சொல்லிக் கொண்டே போகும் இப்படி கம்பீரமான அதிகாரப் பதவியில் இருக்கக்கூடிய அரசு துறைகளை சார்ந்த செவ்வாய் தன்னுடைய சொந்த ஆட்சி வீடான மேஷத்தில் பெயர்ச்சியாவது என்ன மாதிரியான பலன்களை கொண்டு வரும் என்பதை பார்க்கலாம் .
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ராசியிலேயே செவ்வாய் ஆட்சி பெறுவது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும். உங்களுடைய ராசிக்கு எட்டாம் அதிபதி லக்னத்தில் ஆட்சி பெறுவது திடீர் அதிர்ஷ்டத்தையும் தன வரவையும் கொண்டுவரும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய மேன்மையும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபத்தையும் கொண்டுவரும் . அது மட்டும் இல்லாமல் இடம் மனை போன்றவை நீங்கள் வாங்க விற்க தாராளமாக முயற்சிகளில் இறங்கலாம் . இன்னும் ஒரு படி மேலே சொல்லப்போனால் பழைய வீட்டை புதுப்பித்தல் இருக்கின்ற மலையில் வீடு கட்டுதல் போன்ற பிரமாதமான பலன்களில் உங்களுக்கு நடைபெறும். அரசியலில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டு. அதேபோல அரசு பறவைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு தற்போது அந்த பதவி கிடைக்கப் போகிறது .
ரிஷப ராசி:
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 ஆம் பாவத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவது நீண்ட தூர பிராயணங்களில் வெற்றி கிடைக்கும் அதே போல நீங்கள் தானம் தர்மம் செய்வதன் மூலம் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய கெட்ட கர்மாக்கள் விளக்கம் . திருமணத்திற்காக காத்திருக்கின்ற ரிஷப ராசி வாசகர்களுக்கு இதுதான் அந்த பொற்காலம் ஏழாம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெறுவது திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமண பாக்கியத்தை ஏற்படுத்துவதற்கான காலம் .
மிதுன ராசி:
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானம் பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெறுவது மிகப்பெரிய தனபாக்கியத்தை கொண்டு வரும் . ஆறாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருப்பதால் புதிய புதிய தலைவர்கோவில் அறிமுகம் கிட்டும் . அரசாங்க உத்தியோகம் உங்களைத் தேடி வரும் . கடன் சுமை அதிகமாக இருக்கிறது என்ன செய்வதென்றே தெரியாதவர்களுக்கு தற்போது சிறிய கடன்களை பெரிய தொகை வாங்கி அடைகின்ற சூழ்நிலை ஏற்படும். அந்த கடன் தொல்லையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள் . உடம்பில் நோய் இருக்கிறது அது எந்த வைத்தியம் பார்த்தாலும் குணமாகவில்லை என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசி வாசகர்களே நோய் குணமாகும் காலம்தான் இது .
கடக ராசி :
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். பத்தாம் வீடு என்பது உத்தியோகத்தை குறிக்கும் நீங்கள் செய்யும் வேலையில் தொழிலில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். கருமஸ்தானம் என்பது எவ்வளவு பெரிய கர்ம பலன்களை நீங்கள் அனுபவிக்க வேண்டி வந்தாலும் செவ்வாயின் அழுக்கறது தான் உங்களுக்கு கருமங்கள் பிரிந்து நல்ல வழி பிறக்கப் போகிறது.
சிம்ம ராசி:
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய வாழ்க்கைக்கு ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெறுகிறார் ஒன்பதாம் வீடு என்பது பாக்கியஸ்தானம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பலன்களை ஆட்சி பெற்ற சிறுவால் உங்களுக்கு கொண்டு வரும் ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும் தெய்வ அனுகூலம் உண்டாகும் நீண்ட நாட்களாக குலதெய்வத்தை பார்க்க வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு தற்போது இந்த செவ்வாய் பயிற்சி அது மாதிரியான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் . நான்காம் அதிபதி 9ஆம் வீட்டில் ஆட்சி பெறுவது நல்ல இடம் மனை பொருள் போன்றவற்றை உங்கள் கைகளுக்கு கொண்டு வந்து கொடுக்கும் . புதிய வாகனம் வாங்கி மகிழ்வதற்கான வாய்ப்புகள் கிட்டும் .
கன்னி ராசி:
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எட்டாம் பாவத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவது ஏதாவது ஒரு வகையில் நற்பலன்களை கொண்டு வந்தே தீரும் . மூன்றாம் அதிபதி எட்டாம் பாவத்தில் இருப்பது மறைமுகமான முயற்சிகளில் வெற்றி குறிக்கும் குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் அதிர்ஷ்டகரமான சம்பவங்கள் நடைபெறும் . நீங்கள் எதிர்பார்க்கின்ற நல்ல சுப காரியங்கள் உங்கள் வீட்டில் நிகழ்ந்திரும். இளைய சகோதரரின் உதவி கிடைக்கும் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும் .
துலாம் ராசி:
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெறுவது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும் குறிப்பாக திருமணத்திற்காக காத்திருக்கின்ற துலாம் ராசி அன்பர்களுக்கு தற்போது நல்ல காலம் புதிய வேலை கிடைக்கும் இரண்டாம் அதிபதி ஏழாம் வீட்டில் ஆட்சி பெறுவது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக செலவிடுவதற்கான நேரம் இது தன வருவாய் இரட்டிப்பாக உயரும் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள் அயல்நாடு ஆயுள் தேசம் போன்றவை சாதகமாக முடியும் .
விருச்சக ராசி :
அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெறுவது மிகப்பெரிய எதிரியை வெல்லக்கூடிய சக்தியை கொடுக்கும் . நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் அகலும் புதிய மருத்துவத்தின் மூலமாக நோய் விலகுவதை நீங்கள் காணலாம் . செவ்வாயைப் பொறுத்தவரை மூன்று நட்சத்திரங்களில் பயணிக்கிறார் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி சுக்ரனின் நட்சத்திரமான பரணி சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை . இந்த மூன்று நட்சத்திரங்களின் விருச்சக ராசிக்கு மிக ஏற்றமான நட்சத்திரமாக அமைவதால் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி உண்டு .
தனுசு ராசி :
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி வருகிறார் செவ்வாய் ஆட்சி அதிகாரத்தை குறிக்கக்கூடிய கிரகம் என்பதால் போட்டித் தேர்வுகளில் வெற்றி அரசியலால் ஆதாயம் . புத்துண ஸ்தானம் என்பதால் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருக்கின்ற நம் மதிப்பு குழந்தை பெரும் போன்ற நல்ல பலன்களை நடைபெறும் . பூர்வீக ஸ்தானம் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வதோடு பூர்வீகத்திற்கு நீங்கள் சென்று வருவீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும் .
மகர ராசி:
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு செவ்வாய் நான்காம் வீட்டில் ஆட்சி பெறுகிறார் நான்காம் வீடு என்பது வீடு மனை வாகனம் இருக்கின்ற இடம் போன்றவற்றை குறிக்கும் இதன் மூலமாக உங்களுக்கு லாபம் உண்டாகும் . கேதுவின் நட்சத்திரத்தில் பிரயாணம் செய்யும் பொழுது 9 ஆம் வீட்டில் இருக்கக்கூடிய கேது உங்களுக்கு நல்ல பாக்கியத்தையும் தெய்வ அருளையும் வாய்க்க செய்வார் . பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வந்தது இருக்கின்ற இருப்பிடத்தில் நல்ல மகிழ்ச்சி போன்றவற்றை நீங்கள் அனுபவிக்கலாம் .
கும்ப ராசி:
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களின் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெறுவது மிகப்பெரிய தைரிய யோகத்தை கொண்டு வரும் குறிப்பாக எந்த காரியம் எடுத்தாலும் எனக்கு வெற்றி பெறவில்லை என்று மனக்கஷ்டத்தோடு இருக்கும் கும்ப ராசி வாசகர்களுக்கு இதோ செவ்வாய் பெயர்ச்சியின் மூலம் நல்ல வெற்றிகரமான காரியங்களை நீங்கள் செய்து முடிப்பீர்கள் . கும்ப ராசியை பொறுத்தவரை பத்தாம் அதிபதி செவ்வாயாக வருவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்கனவே இருக்கின்ற வேலையில் இருந்து இன்னும் நல்ல வேலைக்கு செல்லுங்கள். பணம் இரு மடங்காக உயிருடன் மற்றவர்களை காட்டிலும் நீங்கள் சமுதாயத்தில் தனித்து தெரிவது போன்ற நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் . ஏற்கனவே இருக்கின்ற உத்தியோகத்தை விரிவுபடுத்துதல் போன்ற உத்தியோக ரீதியான முழு பலன்களை கும்ப ராசியில அனுபவிக்கலாம் .
மீன ராசி:
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இரண்டாம் பாவமான மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவது தன வருவாயை உயர்த்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிட்டும் . ஒன்பதாம் அதிபதியான செவ்வாய் 2 ஆம் வீட்டில் ஆட்சி பெறுவது தந்தை யார் வழி உறவினர்கள் அல்லது சொத்து மூலமாக ஆதாயம் அடைதல். நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளுதல் இருக்கின்ற இருப்பிடம் மாறுதல் அடைதல் போன்ற சுப காரியங்களை எதிர்பார்க்கலாம் . செவ்வாயைப் பொறுத்தவரை அஸ்வினி நட்சத்திரத்தில் பிரயாணம் செல்லும் போது நிச்சயமாக திருமண தடை பட்டவர்களுக்கு திருமண காரியங்கள் கை கூடுதல் . மருத்துவத்தின் மூலம் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று இருக்கிறவர்களுக்கு அது சாத்தியப்படுதல் . சுக்கிரனின் சாரத்தில் செல்லும்போது திடீர் அதிர்ஷ்டங்களை எதிர்பார்த்தல் போன்ற சுப நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம் .