ஹேட்ச்பாக் வகையிலான கார் வாங்க விரும்புபவர்களுக்கு மாருதி நிறுவனத்தின் செலிரியோ மாடல் பெரிதும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இதே பட்டியலில் ஹுண்டாய் சாண்ட்ரோ, டாடா டியாகோ, மாருதி வேகன் ஆர் ஆகிய கார்களும் இருக்கின்றன. இந்த மூன்று ஹேட்ச்பேக் வகை கார்களுள் எது சிறந்தது? இங்கு பார்ப்போம்...


வடிவமைப்பு:


மாருதி செலிரியோ மாடல் மற்ற மூன்று கார்களை விட நீளத்தில் பெரியது. செலிரியோ 3695 மில்லிமீட்டர் நீளம் கொண்டது. டாடா டியாகோ 3765 மில்லிமீட்டர் நீளமும், வேகன் ஆர் 3655 மில்லிமிட்டர் நீளமும், சாண்ட்ரோ 3610 மில்லிமீட்டர் நீளமும் கொண்டவை. அகலம் என்ற வகையில், டாடா டியாகோ 1677 மில்லிமீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள செலிரியோ 1655 மில்லிமீட்டர் அகலம் கொண்டது. சாண்ட்ரோ 1645 மில்லிமீட்டர் அகலமும், வேகன் ஆர் 1620 மில்லிமீட்டர் அகலமும் கொண்டவை. மாருதி நிறுவனத்தின் செலிரியோ, வேகன் ஆர் ஆகிய இரு கார்களின் வீல் பேஸ் 2435 மில்லிமீட்டர் அளவைக் கொண்டதாக இருக்கும் வேளையில், சாண்ட்ரோ, டியாகோ ஆகிய இரு கார்களும் 2400 மில்லிமீட்டர் அளவிலான வீல் பேஸ் கொண்டவை. இந்த நான்கு மாடல்களுள் காருக்குள் அதிக இடம் கொண்டிருக்கும் மாடலாக வேகன் ஆர் இருக்கிறது. அதற்கு அடுத்த இடங்களில் செலிரியோ, டாடா டியாகோ, ஹுண்டாய் சாண்ட்ரோ ஆகிய மாடல்கள் முறையே இடம்பெற்றிருக்கின்றன. 



மாருதி வேகன் ஆர்


 


சிறப்பம்சங்கள்:


குறைந்த விலையில் கார் வாங்கினால் அதில் சிறப்பம்சங்கள் இடம்பெறாது என்ற கருத்துகள் கடந்த காலத்தைச் சேர்ந்தவை. தற்போது நாம் ஒப்பிடும் இந்த நான்கு மாடல் கார்களும் டச் ஸ்க்ரீன் அம்சம் கொண்டவை. மேலும், நான்கு மாடல்களிலும் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை இணைத்துக் கொள்ளலாம். நான்கு மாடல்களிலும் நான்கு பவர் விண்டோஸ், இரட்டை ஏர் பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங், உச்சபட்ச மாடல்களில் ஸ்டீயரிங் கட்டுப்பாடு எனப் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்படுகின்றன. செலிரியோ மாடலில் எலக்ட்ரிக் மூலம் வேலை செய்யும் பக்கவாட்டுக் கண்ணாடி, புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. செலிரியோ மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள் வேகன் ஆர் மாடலிலும் அப்படியே இடம்பெற்றுள்ளன. சாண்ட்ரோ மாடலில் இதே போன்ற டச் ஸ்க்ரீன் இருக்கும் போதும், அவற்றோடு பின்பக்கம் பார்க்க உதவும் கேமரா, பின்பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஏசி துணைகள் ஆகியவை பெரும் பயன்பாடு கொண்டவையாக உள்ளன. டாடா டியாகோ மாடலில் பருவநிலையைக் கட்டுப்படுத்தும் வசதியுடன் பிற கார்களில் இருக்கும் அதே சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 



ஹுண்டாய் சாண்ட்ரோ


 


என்ஜின்:


1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட புதிய செலிரியோ மாடல் சுமார் 66hp, 89Nm ஆகிய ஆற்றல்களைக் கொண்டது. வேகன் ஆர் மாடலில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டுமல்லாமல், மற்றொரு மாடலில் 1.2 லிட்டர் அதிக ஆற்றல் கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் சுமார் 82hp/113Nm ஆற்றலையும், 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் சுமார் 67bhp/90Nm ஆற்றலையும் கொண்டவை. மாருதி நிறுவனத்தின் இந்த இரு மாடல்களிலும் 5 ஸ்பீட் மேனுவல் கியர்களும், AMT வசதியும் கொடுக்கப்பட்டுள்ளன. சாண்ட்ரோ மாடலில் 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு, அது 68bhp, 99Nm ஆகிய ஆற்றலையும் கொண்டுள்ளது. டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு, அது 85bhp, 113Nm ஆகிய ஆற்றலையும் கொண்டுள்ளது. இந்த நான்கு மாடல்களுள் செலிரியோ மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 26.68 கிலோமீட்டர் எனவும், அடுத்த இடத்தில் டியாகோ 23.84 கிலோமீட்டர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. வேகர் ஆர் மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிலோமீட்டர் எனவும், சாண்ட்ரோ மாடல் லிட்டருக்கு 20 கிலோமீட்டர் பயணிக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 



டாடா டியாகோ


 


எது பெஸ்ட்?


மாருதி செலிரியோ மாடலின் விலை சுமார் 4.99 லட்சம் முதல் 6.94 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேகன் ஆர் மாடலின் விலை சுமார் 4.93 லட்சம் முதல் 6.45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரோவின் விலை 4.7 லட்சம் முதல் 6.44 லட்சம் ரூபாய் வரை என முடிவுசெய்யப்பட்டுள்ளது. டியாகோ மாடல் 4.99 லட்சம் முதல் 7.04 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனவே இந்த நான்கு மாடல்களுள் செலிரியோ பிற மாடல்களை விட சிறப்பானதாகவும், அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாகவும் இருக்கிறது. வேகன் ஆர் மாடலில் அதிக பயன்பாட்டு இடம் இருக்கிறது. டியாகோ அதிக விலைகொண்டது என்ற போதும், பிற மாடல்களை விட அளவில் பெரியது. சாண்ட்ரோ பிற மாடல்களை விட விலை குறைந்தது. 


அதிக ஆற்றல், சிறப்பம்சம், விலை.. இதனுள் உங்களுக்கு எது முக்கியத்துவம் கொண்டதோ, அதன் அடிப்படையில் இந்த மாடல்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 


Car loan Information:

Calculate Car Loan EMI