CNG Cars Mileage: கிலோவிற்கு 34 கிமீ மைலேஜ் - கம்மி விலை, டாப் 10 சிஎன்ஜி கார்களின் லிஸ்ட் இதோ..!

CNG Cars Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக மைலேஜ் வழங்கக்கூடிய சிஎன்ஜி கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

CNG Cars Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குறைந்த விலையில், அதிக மைலேஜ் தரக்கூடிய சிஎன்ஜி கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

சிஎன்ஜி கார்கள்:

பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் சூழலில், சந்தையில் சிஎன்ஜி மற்றும் இரட்டை எரிபொருள் தன்மையில் இயங்கும் கார்கள் பொதுமக்களால் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனால் இரட்டை எரிபொருள் அம்சம் கொண்ட கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹுண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவையும் இந்த பிரிவில் வலுவான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இநிநிலையில்  நீங்கள் CNG-ஆற்றல் கொண்ட காரை வாங்கத் திட்டமிட்டிருந்தால், அதிக மைலேஜ் வழங்கக் கூடிய டாப் 10 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சிறந்த மைலேஜ் கொண்ட சிஎன்ஜி கார்கள்:

10. டொயோட்டா டெய்சர்

டொயோட்டா டெய்சர் சிஎன்ஜி கார் மாடல் இந்திய சந்தையில்  8 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1.2 லிட்டர் இன்ஜின் இதில் இடம்பெற்றுள்ளது. ஒரு கிலோவிற்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

9. மாருதி ஃப்ரான்ஸ் சிஎன்ஜி

மாருதி ஃப்ரான்ஸ்க் சிஎன்ஜி கார் மாடல் ரூ.8.46 லட்சத்தில் தொடங்கி ரூ.9.32 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் திறன் கொண்ட இன்ஜின், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

8. டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி

டொயோட்டா கிளான்சா சிஎன்ஜி கார் மாடல் இந்திய சந்தையில் ரூ.8.65 லட்சத்தில் இருந்து ரூ.9.68 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் இன்ஜின் மூலம், ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

7. மாருதி பலேனோ சிஎன்ஜி

மாருதி பலேனோ சிஎன்ஜி கார் மாடல் இந்திய சந்தையில் ரூ.8.40 லட்சத்திலிருந்து ரூ.9.33 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் இன்ஜின் மூலம், ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

6. மாருதி சுசூகி டிசைர்:

ஃப்ளீட் ஆபரேட்டர்களால் மிகவும் விரும்பப்படும் வாகனங்களில் ஒன்றான மாருதி சுசூகி டிசைர் சிஎன்ஜி வடிவில், ஒரு கிலோவிற்கு 31.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. சிஎன்ஜி வேரியண்டின் விலை ரூ.8.44 லட்சம் முதல் ரூ.9.12 லட்சம் வரை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. 

5. மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ:

மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ CNG வேரியண்ட்ல் ஒரு கிலோவிற்கு 32.73 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. S-Presso 1-லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டு டிரிம்களில் கிடைக்கும், எஸ்-பிரஸ்ஸோ சிஎன்ஜியின் விலை ரூ. 5.91 லட்சம் முதல் ரூ.6.11 லட்சம் வரைநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

4. மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டின் சிஎன்ஜி கார் மாடல் இந்திய சந்தையில் ரூ.8.20 லட்சம் முதல் ரூ.9.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.  இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் இன்ஜின் மூலம், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

3. மாருதி சுசுகி வேகன்ஆர்:

டால்பாய் டிசைன்ட் வேகன்ஆர் ஒரு கிலோவிற்கு 33.47 கிலோ மீட்டர் என்ற மைலேஜுடன், இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வேகன்ஆர் சிஎன்ஜியின் விலை ரூ.6.45 லட்சம் முதல் ரூ.6.89 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 1-லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.

2. மாருதி சுசூகி ஆல்டோ கே10:

மாருதி சுசூகியின் ஆல்டோ கே10 எடிஷன் கார் மாடல் 1-லிட்டர், K-சீரிஸ் இன்ஜினை S-Presso, WagonR மற்றும் Celerio உடன் பகிர்ந்து கொள்கிறது. சிஎன்ஜி வகைகளின் விலை ரூ.5.73 லட்சம் முதல் ரூ.5.96 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. CNG வேரியண்டில் ஒரு கிலோவிற்கு 33.85 கிலோ  மீட்டர் மைலேஜ் வழங்கும் திறனை கொண்டுள்ளது.

1. மாருதி சுசுகி செலிரியோ:

இரண்டு வகையான எரிபொருளில் இயங்கும் திறன் கொண்ட செலிரியோ ஒரே டிரிமில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.6.73 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிக்கனமான அதே சமயம் சுவாரஸ்யமாக இருக்கும் அதே 1-லிட்டர் K-சீரிஸ் இன்ஜினை தான் கொண்டுள்ளது. இந்த வாகனத்தின் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு அதிகபட்சமாக 34.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola