Citroen Basalt SUV: சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய பசால்ட் எஸ்யுவி கூபே கார் மாடல்,  இந்திய சந்தையில் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வர உள்ளது.


சிட்ரோயன் பசால்ட் எஸ்யுவி:


சிட்ரோயன் தனது புதிய பசால்ட் விஷன் கூபே-எஸ்யூவியை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது C3,  eC3 ஹேட்ச்பேக்குகள் மற்றும் C3 Aircross SUV மாடலை தொடர்ந்து நிறுவனத்தின் C-Cubed திட்டத்தின் கீழ் வெளியாகும் நான்காவது மாடல் இதுவாகும். இந்த கார் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. பசால்ட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென் அமெரிக்க சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






Citroen Basalt வெளிப்புற வடிவமைப்பு:


சிட்ரோயன் பசால்ட் மாடல் C3 ஏர்கிராஸுடன் மிக நெருக்கமான ஒற்றுமைகளை கொண்டுள்ளது. குறிப்பாக வெளிப்புற கட்டமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளது. கிரில் இன்செர்ட்களுக்கு சற்று வித்தியாசமான பூச்சு இருந்தாலும்,  அதே குரோம்-லைன் செவ்ரான் லோகோ வழங்கப்பட்டுள்ளது. மற்ற C-க்யூப் மாடல்களில் காணப்படும் ஹாலோஜென் விளக்குகளுக்குப் பதிலாக பசால்ட் புரொஜெக்டர் முகப்பு விளக்குகளை பெறுகிறது. பானெட் மற்றும் பகல்நேரங்களிலும் எரியும் விளக்குகளில் எந்த மாற்றங்களும் இல்லை. 


கன்-மெட்டல் ஃபினிஷுடன் அலாய் வீல்கள் உடன்,  இழுக்கும் வகை கதவு கைப்பிடிகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பசால்ட், சுத்தமான மேற்பரப்பு மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட டெயில்-லேம்ப்களுடன் ஒரு குறுகிய, குட்டையான பின்புறத்தைக் கொண்டுள்ளது. அவை C3 ஏர்கிராஸில் உள்ள அதே வடிவத்தை பிரதிபலிக்கிறது. சுமார் 4.3 மீட்டர் நீளத்தில் பாசால்ட், C3 ஏர்கிராஸைப் போலவே உள்ளது. 


இன்ஜின் & விலை விவரங்கள்:


அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் மூலம் பசால்ட் காரின் வெளிப்புற விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், காரின் உட்புறம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  காரின் டாஷ்போர்ட் C3 Aircross-ல் இருப்பதை போன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.,  மின்சார மடிப்பு கண்ணாடிகள், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பயணக் கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜிங், புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற அம்சங்கள், தற்போதுள்ள சி-கியூப் மாடல்களில் இடம்பெறாத நிலையில் புதிய மாடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போதுள்ள சி-க்யூப்ட் மாடல்களுடன் இன்ஜினை பகிர்ந்தால், பசால்ட் 110எச்பி, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது.  பெட்ரோ வேரியண்ட்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு,  அனைத்து மின்சார வேரியண்ட்களும் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் பாசால்ட் பற்றிய கூடுதல் விவரங்களை அறிவிக்கப்படும் என்று சிட்ரோயன் தெரிவித்துள்ளது. அதன்படி, மின்சார பதிப்பு ஜனவரி அல்லது பிப்ரவரி 2025 க்குள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI