சமீபகாலமாக கார் விற்பனை அவ்வளவு அமோகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே நிலைதான் நவம்பர் 2022 கார் விற்பனை அட்டவணையிலும் பிரதிபலிக்கிறது. ஒட்டுமொத்தமாக 3,20,564 யூனிட்களை விற்பனை செய்துள்ள வாகனத் துறை, சென்ற வருடம் நவம்பர் மாதத்தை விட 75,714 யூனிட்களை கூடுதலாக விற்று 30.92% ஆண்டு வளர்ச்சியைக் காட்டியிருந்தாலும், இதற்கு முந்தைய மாதமான அக்டோபர் 2022 இல் விற்கப்பட்ட 3,36,298 யூனிட்களைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மாருதி


மாதாந்திர விற்பனையில் சரிவு 4.68% ஆகவும், இழப்பு 15,734 யூனிட்களாகவும் ஆகவும் உள்ளது. இந்த பிரிவின் முக்கிய பங்களிப்பாளரான மாருதி சுசுகி கடந்த மாதம் 1,32,395 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நவம்பரில் 22,669 கார்கள் அதிகமாகி விற்று ஆண்டு வளர்ச்சி 20.66% பெற்றுள்ளது. முந்தைய மாதமான அக்டோபரில் விற்கப்பட்ட 1,40,337 எண்ணிக்கையை ஒப்பிடுகையில், மாருதி 5.66% விற்பனையை இழந்துள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த கார் விற்பனையில் 41.30% கார்கள் மாருதி கார்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹூண்டாய்


ஹூண்டாய் கடந்த மாதம் 48,003 கார்களை விற்பனை செய்து 2வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு இதே மாதம் 37,001 விற்பனையான நிலையில், ஹூண்டாய் 29.73% ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது மற்றும் மொத்த கார் விற்பனையில் 14.97% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் வெறும் 2 கார்கள் கூடுதலாக விற்பனை செய்ததால் மாதாந்திர விற்பனை பட்டியலில் வித்தியாசம் இன்றி அதே இடத்தில் உள்ளது. 



டாடா


ஹூண்டாய் நிறுவனத்தை 2வது இடத்தில் இருந்து வீழ்த்துவதற்கான போராட்டத்தில் தோல்வியுற்ற, டாடா மோட்டார்ஸ் 46,037 யூனிட்களை விற்றது, இது கடந்த ஆண்டு விற்பனையான 29,778 யூனிட்களிலிருந்து 54.6% அதிகமாகும். 15,259 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்துள்ளது. முந்தைய மாதத்தை ஒப்பிடுகையில், 1.81% வளர்ச்சியுடன் 820 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்து, கணிசமான MoM வளர்ச்சியைப் பதிவு செய்து மாதாந்திரப் பட்டியலில் டாடா முதல் இடத்தில் உள்ளது. மொத்த கார் விற்பனையில் 14.36% டாடா வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: தயாரா மக்களே... இன்று முதல் தமிழகத்தில் கனமழை இருக்கு - வானிலை ஆய்வு மையம்..!


மஹிந்திரா மற்றும் கியா


கடந்த மாதம் 30,392 வாகனங்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு 19,458 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில், மஹிந்திரா 56.19% ஆண்டு வளர்ச்சியை பெற்றுள்ளது. முந்தைய மாதத்தில் 32,298 வாகனங்கள் விற்கப்பட்ட நிலையில் 5.90% MoM சரிவையும் பதிவு செய்தது. நவம்பர் 2022 இல் 24,025 யூனிட்கள் விற்கப்பட்ட கியா அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்த மாதம் வேர் 14,214 கார்களை மட்டுமே விற்ற Kia 69% ஆண்டு வளர்ச்சியுடன், 3.01% மாதாந்திர வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.



சறுக்கிய நிறுவனங்கள்


டொயோட்டா வருடாந்திர விற்பனை மற்றும் மாதாந்திர விற்பனை இரண்டிலும் மோசமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதால், 9.52% வருடாந்திர சரிவையும், 10.48% மாதாந்திர சரிவையும் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 11,765 யூனிட்கள் விற்கப்பட்ட நிலையில், டொயோட்டா 3.67% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. ஹோண்டா மற்றும் ரெனால்ட் ஆகியவை முறையே 7,051 மற்றும் 6,330 யூனிட்களை விற்பனை செய்து 7வது மற்றும் 8வது இடங்களைப் பிடித்துள்ளன மற்றும் விற்பனை சதவிகிதத்திலும் அதே நிலையில் உள்ளன. டொயோட்டாவை போலவே நிஸான், வோல்க்ஸ்வேகன், ஜீப் ஆகிய நிறுவனங்கள் மிகவும் மோசமான எண்ணிக்கையை இரு பட்டியலிலும் பெற்றுள்ளனர். அதிலும் வோல்க்ஸ்வேகன் எல்லாவற்றையும் விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வருடாந்திர ஒப்பீட்டில் 29.09 சதவிகிதம் இழந்த அந்த நிறுவனம், மாதாந்திர ஒப்பீட்டில் 44.87 சதவிகிதம் இழந்துள்ளது. அந்த நிறுவனம் இந்த வருடம் வெறும் 1,935 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


நிலையான முன்னேற்றம் கண்ட ஸ்கோடா


இரு பட்டியலிலும் முதல் இடத்தில் மாருதி இருந்தாலும் அதீத வளர்ச்சியை கொண்டுவந்தது ஸ்கோடா என்றுதான் கூற வேண்டும். கடந்த வருடத்தை விட இரு மடங்கு அதிகமாக கார்களை விற்பனை செய்து 101.87 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது அந்நிறுவனம். மாதாந்திர ஒப்பீட்டிலும் 30.81 சதவிகித அசைக்க முடியாத வளர்ச்சியை தந்து மற்ற கார்களை விட பல மைல் தூரம் முன்னிலை வகிக்கிறது. அதே போல புதிதாக இந்தியாவுக்கு வந்த சிட்ரியான் நிறுவனம் கடந்த வருடம் இந்த மாதத்தில் வெறும் 52 கார்கள் தான் விற்பனை செய்தன. ஆனால் இந்த வருடம் 825 கார்கள் விற்பனை செய்து 1486.54 சதவிகிதம் அதிகம் விற்பனை செய்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI