November Car Sale: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த நவம்பர் மாதத்தில் அதிக கார்களை விற்றதில், மாருதி சுசுகி நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.


நவம்பர் மாத கார் விற்பனை:


பண்டிகை காலத்தை ஒட்டி நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஏரளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதோடு, வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகளும் அள்ளி வீசப்பட்டன. இதனால், கார் விற்பனை என்பது அமோகமாக இருந்தது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக விற்பனையை பதிவு செய்த முதல் 4 நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நான்கு நிறுவனங்களும் இந்திய கார் சந்தையில் முதல் நான்கு இடங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மாருதி சுசுகி நிறுவன விற்பனை:


Maruti Suzuki நிறுவனம் கடந்த நவம்பர் மாதத்தில் (உள்நாட்டு + ஏற்றுமதி) ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 439 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 44 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது,  3.4 சதவிகிதம் முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் 2023 அக்டோபரில் விற்கப்பட்ட 1,99, 217 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.


டாடா நிறுவன விற்பனை:


நவம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் மந்தமான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, மொத்த உள்நாட்டு விற்பனை நவம்பர் 2022 இல் விற்கப்பட்ட 73,467 யூனிட்களில் இருந்து 1 சதவீதம் குறைந்து 72,647 யூனிட்டுகளாக குறைந்துள்ளது. அதோடு, கடந்த அக்டோபரில் 80,825 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதுடன் ஒப்பிடுகையில் மாத விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது. 


மஹிந்திரா நிறுவன விற்பனை:


 இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா,  நவம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக் 70 ஆயிரத்து 576 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் இந்த நிறுவனம் 58,303 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், நடப்பாண்டில் அது 21 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. 


ஹுண்டாய் விற்பனை விவரம்:


ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 65,801 கார்களை விற்றது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 64,003 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் 2.80 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் கார் தயாரிப்பாளர் 49,451 யூனிட்களை விற்பனை செய்த நிலையில்,  கடந்த ஆண்டு நவம்பரில் 48,002 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கியா விற்பனை நிறுவனம்:


கியா நிறுவனம் நவம்பர் மாதத்தில் 22 ஆயிரத்து 672 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் ஒட்டொமொத்த கார் விற்பனையில் 6.4 சதவிகிதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடுகையில் கியா நிறுவனத்தின் விற்பனை 5.3 சதவிகித சரிவை கண்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI