BMW R 1300 GS: பிஎம்டபள்யூ நிறுவனத்தின் ஆர் 1300ஜிஎஸ் மாடல் மோட்டார்சைக்கிளின் விலை, இந்திய சந்தையில் 20 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement


பிஎம்டபள்யூ ஆர் 1300ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பிஎம்டபள்யூ நிறுவனத்தின் ஆர் 1300ஜிஎஸ் மாடல் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 20 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது,  R 1250 GS மாடலின் தொடக்க விலையை காட்டிலும், புதிய பைக்கின் விலை 40 ஆயிரம் ரூபாய் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லைட் ஒயிட், டிரிபிள் பிளாக், ஜிஎஸ் டிராபி மற்றும் ஆப்ஷன் 719 ட்ரமுண்டானா ஆகிய நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.


இன்ஜின் விவரங்கள்:


R 1300 GS ஆனது 13.3:1 சுருக்க விகிதத்துடன் ஒரு ஹாரிசாண்ட்லி ஆப்போஸ்ட், 1,300cc, இரட்டை சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. முந்தைய மாடலில் 1,254சிசி இன்ஜின் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச ஆற்றல் வெளியீடு 7,750rpmல் 145hp ஆகவும், 134hp மற்றும் 143Nm இல் இருந்து 6,500rpm இல் 149Nm டார்க்காகவும் அதிகரித்துள்ளது.  19-லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்குடன், R 1300 GS 237kg எடையைக் கொண்டுள்ளது. முந்தைய மாடலை விட எரிபொருள் கொள்ளளவு ஒரு லிட்டர் குறைந்துள்ளதோடு, வாகனத்தின் எடையும் 12 கிலோ குறைவாக உள்ளது. 


பிஎம்டபள்யூ ஆர் 1300ஜிஎஸ் வடிவமைப்பு:


சர்வதேச சந்தைகளில் சில இடங்களில் கிடைக்கும் R 1300 GS பைக்குகளில் அலாய் வீல்கள் அல்லது ஸ்போக் ரிம்களை போலில்லாம, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து பைக்குகளும் கிராஸ்-ஸ்போக் டியூப்லெஸ் வீல்களையே ஸ்டேண்டர்டாக கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்தியா-ஸ்பெக் 1300 GS பைக்குகளிலும் உள்ள மற்ற ஸ்டேண்டர்ட் அம்சங்கள் ஆறுதல் மற்றும் டைனமிக் பேக்கேஜ்களாக இருக்கும். இதில் எலெக்ட்ரானிக் விண்ட்ஸ்கிரீன், பை டைரக்‌ஷனல் குயிக் ஷிஃப்டர், சென்டர் ஸ்டாண்ட், ப்ரோ ரைடிங் மோடுகள் என பல உள்ளன. 


பேசிக் லைட் ஒயிட் தவிர அனைத்து வேரியண்ட்களும் டூரிங் பேக்கேஜை ஸ்டேண்டர்டாக பெறுகின்றன. பேக்கேஜில் பேனிர் மவுண்ட்ஸ், குரோம்ட் எக்ஸாஸ்ட் ஹெடர் பைப்புகள், அடாப்டிவ் முகப்பு விளக்குகள், நக்கிள்-கார்ட் எக்ஸ்டெண்டர்கள் மற்றும் ஜிபிஎஸ் சாதனத்திற்கான மவுண்டிங் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன இந்தியாவில், டிரிபிள் பிளாக் வேரியண்ட் மட்டுமே  அடாப்டிவ் ரைடு ஹைட் ஆப்ஷன் அம்சத்தை கொண்டிருக்கும்.


பாதுகாப்பு அம்சங்கள்:


ரேஞ்ச் டாப்பிங் ஆப்ஷன் 719Tramuntana மட்டுமே ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் முன்புற மோதல் வார்னிங் போன்ற ரேடார்-உதவி பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது,. அத்துடன் கண்ணைக் கவரும் பச்சை/மஞ்சள் பெயிண்ட் ஆப்ஷன், பல்வேறு கலவையான உலோகக் கூறுகள் மற்றும் ரேடார் உதவி பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.  இருப்பினும் இப்போதைக்கு, இந்த சிறந்த மாடலை ARH அம்சத்துடன் குறிப்பிட முடியாது. 


விலை விவரங்கள்:


20.95 லட்சத்தில், R 1300 GS விலை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. அதன் போட்டியாளரான டுகாட்டி மல்டிஸ்ட்ராடா V4 வரிசை ரூ. 21.48 லட்சம் முதல் ரூ.31.48 லட்சம் மற்றும் ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா 1250 ஸ்பெஷல் விலை ரூ. 24.64 லட்சம் என நிலவுகிறது. ட்ரையம்ப் டைகர் 1200 ஜிடி ப்ரோ ரூ. 19.19 லட்சத்தை விலையாக கொண்டுள்ளது. R 1300 GSக்கான டெலிவரி இந்த மாதம் தொடங்க உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI