சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான பென்ஸ், ஜாகுவார், ஆடி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திவிட்டன. அந்த நிறுவனங்களுக்கு இணையான மற்றொரு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ, தனது எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில் BMW iX மின்சார SUV (BMW iX e-SUV) இந்தியாவில் டிசம்பர் 13 திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்டில் புதிய எஸ்யூவி அனைத்து சோதனைப் பிரிவுகளிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய BMW காருக்காக இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.



ஜெர்மனியின் சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ இம்முறை எலக்ட்ரிக் எஸ்யூவியை கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் எஸ்யூவி கார் இதுவாகும். இந்த நேரத்தில், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் மிகவும் பிரீமியம் அம்சங்களைக் கொண்ட இந்த மின்சார கார் பற்றிய பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்தாலும், இன்று காரின் விலை உறுதியானது. இந்த பிஎம்டபிள்யூ காரின் விலை இந்திய சந்தையில் ரூ.1,15,90,000 (1.16 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகளை நாட்டில் உள்ள அனைத்து BMW டீலர்ஷிப்களிலும், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் செய்யலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.



BMW IX E SUV வாகனத்தில் பிரேக்குடன் கூடிய முன் மோதல் எச்சரிக்கை அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இதனல், வாகனத்தை ஓட்டுபவர், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்கள் உட்பட ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய வாகனங்களைப் பற்றிய தகவல்களும் தொடர்ந்து பெறமுடியும். அதே நேரத்தில், வாகனத்தில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் இருக்கிறது. இது, கார் ஓட்டுநரின் வேலையை மிகவும் எளிதாக்கும். சர்வதேச சந்தையில், BMW iX ஏற்கனவே இரண்டு வகைகளில் கிடைக்கிறது - xDrive 40 மற்றும் xDrive 50. xDrive 40 வேரியண்டில் 71 kWh பேட்டரி பேக் உள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் iX xDrive 40 எனும் எலெக்ட்ரிக் கார் வேரியண்டை தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், 326 பி.ஹெச்.பி. திறனுடன் இயங்கக்கூடியதாகும்.






மேலும் இந்த கார் 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்த செய்கிறது. இதனால் பூஜியத்திலிருந்து 100 கி.மீ வேகத்தை 6.1 விநாடிகளில் எட்ட முடியுமாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 414 கிமீ தூரம் செல்லக்கூடிய இந்த பேட்டரி பேக் இது. இரட்டை மோட்டார்கள் 322 BHP மற்றும் 630 Nm பொருத்தப்பட்டுள்ளது. xDrive 50 வேரியண்ட், 105.2 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது, இது அதிகபட்சமாக 611 கிமீ வரம்பை வழங்குகிறது. இது தவிர, காரின் உட்புற அம்சங்களும் சிறப்பாக இருப்பதால் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் அட்டகாசமாக உள்ளது. இந்த BMW கார் Mercedes EQC, Jaguar I-Pace மற்றும் Audi e-tron ஆகியவற்றுடன் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இந்த மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக BMW இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. புதிய தொழில்நுட்பகளை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு வரவேண்டும் என பி.எம்.டபிள்யூ விரும்புவதாக, அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


Car loan Information:

Calculate Car Loan EMI