சொகுசு வாகனங்களுக்கு பெயர் போன பிஎம்டபிள்யூ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தனது வாகனங்களை தொடர்ந்து மேம்படுத்தி புதிய மாடலாக சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பைக்குகளின் விலை கூடுதலாக இருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிஎம்டபிள்யூ S 1000 RR பைக் மாடல் அறிமுகம்:
இந்நிலையில், உலக சந்தையில் நடப்பாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வந்த S 1000 RR மாடலை, பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் கோவாவில் நடைபெற்ற India Bike Week in 2022 நிகழ்ச்சியில் ஏராளமான நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்களை காட்சிப்படுத்தின. அந்த வகையில் தங்களது பல்வேறு மாடல் பைக்குகளை காட்சிப்படுத்திய பிஎம்டபிஎள்யூ நிறுவனம் யாரும் எதிர்பாராத விதமாக, அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே 2023 S 1000 RR மாடல் பைக்கையும் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்ஜின் திறன் விவரங்கள்:
இந்த மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 206.5 குதிரைகளில் திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேமும், ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட S 1000 RR பைக் மாடலின், ஆரம்ப விலை ரூ.20.25 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக ரூ.24.45 லட்சமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்:
S 1000 RR பைக் அறிமுகத்தின் போது யாரும் எதிர்பாராத விதமாக புதிய, CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் காட்சிப்படுத்தியது. புதிய CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லாங் சைடு பேனல்கள், எல்.ஈ.டி முகப்பு விளக்குகள் மற்றும் டிசைன் பிட்கள் கொண்டுள்ளன. நீளமான ஒற்றை இருக்கை, மஸ்குலர் உடலமைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 31 கிலோவாட் பீக் பவர் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. 8.9kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரியும் இடம்பெற்றுள்ளது.
130 கி.மீ. ரேன்ஜ்:
வழக்கமான சார்ஜரைப் பயன்படுத்தி, பேட்டரியை 4 மணி 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேநேரம், ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 1 மணிநேரம் 40 நிமிடங்களுக்குள்ளும் இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 0 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 120 கிலோமீட்ர் வேகத்தில் வாகனத்தை செலுத்த முடியும்.
சிறப்பம்சங்கள்:
பிரேக்கிங்கிற்கு 265mm முன்புற சிஸ்ர், பின்புற டிஸ்க் 15 இன்ச் வீல்களில் மவுண்ட் செய்யப்பட்டு உள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் Eco, Road மற்றும் Rain என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், டிஎஃப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் நேவிகேஷன் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. முழு ஸ்மார்ட்போன் இணைப்பையும் கொண்டுள்ளது.
விலை விவரம்:
light white மற்றும் matt black ஆகிய இரண்டு நிறங்களில் இந்த வாகனம் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகாத நிலையில், C 400 GT ஸ்கூட்டார் மாடலுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, CE 04 ஸ்கூட்டரும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை, சுமார் ரூ.21.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலம் என கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI