Best Mileage Diesel Cars Under 10 Lakhs: இந்திய ஆட்டோமொபைல்  அதிக மைலேஜ் வழங்கும் டீசல் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


அதிக மைலேஜ் வழங்கும் டீசல் கார்கள்:


கார் என்பது பணக்காரர்களுக்கானது என்பதை தாண்டி, தற்போது நடுத்தர வர்கத்தினர் இடையேயான பயன்பாடும் அதிகரித்துள்ளது. அதேநேரம், பெரும்பாலானாவர்களின் கார் தேர்வு என்பது விலை மற்றும் மைலேஜ் ஆகிய முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தான் அமைகிறது. இந்நிலையில், 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் அதிக மைலேஜ் வழங்கும் டீசல் கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 


Tata Tiago:


டாடா நிறுவனத்தின் டியாகோ மாடல் சமகால பயனாளர்களை கவரும் விதமாக ஒரு ஹேட்ச்பேக் ஆகும். 1047 cc இன்ஜின் கொண்டுள்ள இந்த ஐந்து பேர் அமரும் வகையிலான விசாலமான இடம் கொண்டுள்ளது. இதன் எரிபொருள் டேங்க் 35 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள சூழலில், லிட்டருக்கு 27.28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க விலை 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும்.


Hyundai Grand i10 Nios:


ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்  ஸ்டைல் மற்றும் செயல்திறனில் சிறந்து விளங்கும் ஒரு ஹேட்ச்பேக் ஆகும். 1.2 லிட்டர் CRDi டீசல் இன்ஜின் மூலம் இது  இயக்கப்படுகிறது. இது 1186 cc ஆற்றலை வழங்குகிறது. இந்த வாகனத்தின் எரிபொருள் டேங்க் 37 லிட்டர்  கொள்ளளவை கொண்டுள்ள சூழலில், லிட்டருக்கு  25 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் வழங்குகிறது. இதன் தொடக்க விலை 5 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஆகும்.


Tata Nexon:


சிறிய எஸ்யுவியான டாடா நெக்ஸான்,  1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. இது, 1497 சிசி ஆற்றலை வெளிப்படுத்துகிறது.  இதன் எரிபொருள் டேங்க் 44 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது. ஆட்டோமேடிக் வேரியண்ட்  லிட்டருக்கு 24.07 கிலோ மீட்டர் தூரமும், மேனுவல் வேரியண்ட் 23.22 கிலோ மீட்டர் தூரமும் மைலேஜ் வழங்குகிறது. இந்த மாடலின் தொடக்க விலை 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.


Maruti Suzuki Ertiga:


மாருதி சுஸுகி எர்டிகா 1498 சிசி இன்ஜினுடன் அதிக மைலேஜ் தரும் டீசல் கார்களில் ஒன்றாக உள்ளது. இதன் எரிபொருள் டேங்க் 45 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள சூழலில், லிட்டருக்கு 24.2 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. இதன் தொடக்க விலை 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் ஆகும்.


Mahindra Xuv300:


மஹிந்திரா XUV300 ஆனது 1497 cc டிஸ்ப்ளேஸ்மென்ட் கொண்ட 15 லிட்டர் CRDe டீசல் இன்ஜினுடன் வருகிறது. ஐந்து பேர் அமரும் திறன் கொண்ட இந்த SUV-யின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 42 லிட்டர் ஆக உள்ளது.  லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் வழங்குகிறது. இதன் தொடக்க விலை 7 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆக உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI